பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கும் ஒரு திருஷ்டி.யும் அவனுக்கிருந்தது. 2.தாரணமாக, நெப்போலியனின் அசுரத்தனமான வளர்ச்சியைக் கண்டு, ஐரோப்பிய உலகமே அதிசயித்துக் கொண்டிருந்த வேளையில், அவனது வீழ்ச்சியைப் பற்றிக் கேள்வியுற்றவுடனேயே, 2 81 5-ம் ஆண்டில் “ 'வீழ்ந்துபட்ட கொடுங்கோலனே! நான் உன்னை வெறுத்தே வந்தேன்!”: (I hated three, fallen tyrant!) என்று முதன்முதலில் குரல் கொடுத்தவன் ஷெல்லி என்று தா'என் சொல்லவேண்டும். இதனைக் குறித்து எட்வர்ட் ஏவ்லிங்கும், எலினார் மார்க்ஸ் ஏவ்லிங்கும் சேர்ந்து எழுதி யுள்ள 'ஷெல்லியின் சோஷியலிசம்' என்ற நூலில் பின் வரு' 'வாறு குறிப்பிட்டுள்ளார்கள் ; "ஷெல்லியின் காலத்தில் நெப்போலியனை ஊடுருவி நோக்கி 8.5 முதல் மனிதனாக, சொல்லப் போனால் ஒரே மனிதனாக, ஷெல்லிதான் இருந் தான். ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொருவரும் நெப்போலியனை ஒரு வீரனாகவோ அல்லது ராக்ஷசனாகவோ கருதி வந்த அந்தக் காலத்தில், சாம்ராஜ்ய வேட்கையின் சிறுமைக்கும், பொன்னாசைக்கும் இரையான ஒரு கீழ்த்தரமான, ஒரு வலு வற்ற மனிதன் தான் அவன் என்பதை ஷெல்லி இனம் கண்டு கொண்டான்” (Shelley's Sociatist-Edward Aveling and Pleanor Marx Aveling). இவ்வாறு தீர்க்க தரிசனமான திருஷ்டி கொண் டிருந்த ஷெல்லி, எதிர் காலத்தில் உருவாகக் கூடிய {தெளிந்த சமதர்ம லட்சியத்துக்கும், அதற்கான தடை முறைக்கும் உதவக்கூடிய ஜீவசக்தி மிகுந்த வித்துக்கள் பல வற்லறயும் தனது . LAடைப்புக்களில் விதைத்துச் செள் நீருந் தான் என்றே சொல்லவேண்டும். ஷெல்லி ஹாரிபெட்டை. மணந்த புதிதில், அயர்லாந்துக்குச் சென்றது குறித்து முன்னர் எழுதியுள்ளோம். அந்தப் பதினெட்டாவது வயதில், அ63ன் 'உரிமைகளின் பிரகடனம்' (Declaratiye of Rights) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டான். இதனைக் குறித்து விமர்சகர் எட்மண்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்; (ஷெல்லியின் உரிமைகளின் பிரகடனம்' முழுவதும், இந்தக் காலத்தில் மிகவும் மிதமானதொரு சோஷியலிஸமாகவே கருதப்ப டும்' (Shelley and his Poetry-E, W. Edmurdls), ஷெல்லி சோஷியலிஸ இயக்கத்தின் கவிஞனாக இருக்கவில்லை, 28).