பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவித்தன என்கிறார் கென்னத் மூர், இவ்வாறு ஷெல்லி யின் சீடர்கள் என்றும், வாரிசுகள் என்றும் தம்மை அழைத் துக்கொண்ட இளங்கவிஞர்கள் அன்றைய இங்கிலாந்தின் அவல நிலையைக் குறித்துப் பல பாக்கள் பாடினார்கள், அவர். களிற் சிலர் ஓர் ரகசியமான அரசியல் இயக்கத்தையும்கூடத் தொடங்கி நடத்தினார்கள்; சாசன இயக்கத்தில் கலந்து கொண் - கவிஞர்களில் சிலர் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு ஆளாகிச் சிறைத் தண்டனையும் பெற்றார்கள்; சிலர் சோஷியலிஸ்ட் இயக்கத்திலும் தலைவர்களாகப் பங்காற்றி னார்கள். இத்தகைய இளங் - கவிஞர்களைப் பற்றியெல்லாம் எழுதிவரும் கென்னத் மூர் தமது கட்டுரையைப் பின் வரும் முத்தாய்ப்பு? 7டு முடிக்கிறார்: சாசன இயக்கத்தா"வர ஷெல்லிதான் தூண்டிவிட்டான் என்றால், தொழிற் கட்சி தோன்றுவதற்கும் அவனொரு துராதொலையான காரணமாக இருந்தான் என்றும் சொல்லலாம், பெர்னாட்ஷா தமது முன்னுரைகள் ஒன்றில் அவருக்கு கிகமிகப் புனிதமா37 ஓரே | கவிஞன் ஷெல்லிதான் என்று குறித்துள்ளார், மேலும், ஆரம்ப காலத்து ஃபேபியன் சங்கத்தார் (Fabian Society) களில் பலர் தமது சட்டைப்பைகளில் ஷேல்லியின் கவிதை களைச் சுமந்து செல்வது வழக்கம் என்றும் கூறப்பட்டுள்ள ஆர்.

  • கவிஞர்கள் என்ற முறையில் பெரியவர்கள் என்று கருதப்

பட்டாலும் கூட, கீட்ஸ் அல்லது லோர்ட்ஸ்வோர்த் ஆகி யோரைக் காட்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கருத் தோட்டத்தின்மீது--அது கவிதை நடை விஷயத்தில் இல்லா விட்டாலும்கூட-ஷெல்லிக்கே ஒரு பெரும் செல்வாக் கிருந்தது என்று வாதிக்க முடியும் . கவிஞர்கள் எப்படி யிருக்க வேண்டும் என்று அவனே சொன்னானோ, அதே போன்று அவனும் ஒரு அங்கீகரிக்கப் படாத சட்ட நிர்மாணி', யாகவே இருந்தான். ஷெல்லி இளம் வயதில் மறைந்தாலும், அவனது தீர்க்க தரிசனயான திருஷ்டியும், முற்போக்கான கருத்துக்களும், சுதந்திர வேட்கையும், சடிதர்ம ஆர்லமும் அவனது பீற் காலப் பரம்பரையின்மீது பேராதிக்கம் செலுத்த்த்தான்