பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தன. அதனால்தான் சோஷியலிஸ சித்தாந்தத்தை வகுப் பதில் காரல் மார்க்சுக்குத் துணை நின்ற பிரடெரிக் ஏங்கல்ஸ்

  • 1844-ம் ஆண்டில், இங்கிலாந்திலுள்ள தொழிலாளி

வர்க்கத்தின் நிலைமைகள் என்ற தலைப்பில் தாம் எழுதிய ஒரு நூலில் ஷெல்லியைப் பற்றிக் குறிப்பிடும்போது,

  • 'ஷெல்லி, மேதையான, தீர்க்கதரிசியான ஷெல்லி" (On Liter-

atture and Art K. Marx and F. Engels) என்று வி தந் தோதிப் பாராட்டியுள்ளார். ஷெல்லியைப் பற்றிக் கூறிய இதே வார்த்தைகளை நாம் LIKாரதிக்கும் அப்படியே கூறலாம். பாரதியும் ஒரு புரட்சியின் குழந்தைதான் என்று ஆரம்பத்தில் நாம் பார்த்தோம், 1903-ம் ஆண்டின் ருஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து, இந்தியாவில் எழுந்த தீவிரவாதத் தேசிய இயக்கத்தோடு கலந்து, அவன் ஒரு தேசிய கவியாக மலர்ந்தான். ஷெல்லிக்குப் பின்னர் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலத் துக்குப் பிறகு பிறந்தது. பாரதி, உலகத்தில் சோஷியலிஸ இயக்கம் தோன்றி விட்ட ைத க் காணும் வாய்ப்பைப் பெற்றான். மேலும் 1905-ம் ஆண்டில் ருஷ்யாவில் தோற்றுப்போன தொழிலாளர் புரட்சி, பன்னி ரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ! 917-ம் ஆண்டில் வெற்றி பெற்றதையும், உலகத்திலேயே முதன்முதலாக, அங்கு ஒரு சோஷியலிஸ சமுதாயம் பிறப்பெடுத்ததையும் காணும் வாய்ப்பையும் பெற்றான். பாரதியின் செம்பாகமான இலக்கிய வாழ்க்கைக் காலமே இந்த இரு புரட்சிகளை யும் உள்ளிட்ட காலம் தான் ' என்றே சொல்லலாம். . ருஷ்யப் புரட்சி நிகழ்ந்து, அது வெற்றி பெற்றபோது, நெப்போலி யனின் வீழ்ச்சியை ஐரோப்பாவிலேயே முதல் மனிதனாக எப்படி ஷெல்லி வரவேற்றுப் பாடினானோ, அதேபோல் நஷ்ய நாட்டுக்கு வெளியேயிருந்து ருஷ்யப் புரட்சியையும், ஜார் மன்னனின் வீழ்ச்சியையும் வரவேற்று முதன்முதலிற் பாடிய இந்தியக் கவிஞனாகவும் பாரதியே : திகழ்ந்தான் . கிருத யுகத்தைப் பற்றிக் கனவு கண்ட பாரதி அந்தப் புரட்சியை யுகமாற்றத்தைக் கொணர்ந்த “ யுகப் புரட்சி