பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தனது 'புதிய ருஷ்யா' என்ற கவிதையில் வாழ்த் தினான் . ருஷ்யப் புரட்சியின் மூலமாக, உலகில் கலியுகம் அழிந்து கிருதயுகம் தொடங்கி விட்டதாக அவன் கருதினாள். எனவேதான், இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்

  • கிருதயுகம் எழுக மாதோ!

- (புதிய ருஷ்யா , பாடல் ) என்று அதனை வாழ்த்தி வரவேற்றான். மேலும், அவன் இந்தக் காலம் தொட்டு, தனது இறுதிக்காலம் வரையிலும் எழுதிய பத்திரிகைக் கட்டுரைகள் முதலியவற்றிலும், சோஷியலிஸக் கொள்கையை நன்கு புரிந்து, அதன் பிரச்சினை கள் பலவும் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளான் என்பதை யும், இந்திய நாட்டுக்கும் அத்தகையதொரு புதிய சமுதாய அமைப்பு வேண்டும் என்று அவன் விரும்பியதையும் அவனது கட்டுரைத் தொகுதியிலிருந்து நாம் எளிதில் அறியலாம், அத்துடன் அவன் தான் வாழ்த்த வந்த பாரத சமுதாயம், முப்பது கோடி ஜனங்களின் ஸங்கம் ' முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம்

  • உலகத்துக் கொரு புதுமை

(பாரத சமுதாயம்-அனுபல்லவி) மன்ற நீதியை, சமுதாய அமைப்பைக் கைக்கொண்டே வாழ வேண்டும், வாழமுடியும் என்றும் வகுத்துரைத்தான் , ஷெல்லி சோஷியலிஸ இயக்கம் தோன்றுவதற்கு முன்பே தோன்றி, அந்த இயக்கத்துக்கோர் முன்னோடியாகத் திகழ்த் 1 தான் என்று முன்னர் பார்த்தோம். பாரதியைப் பொறுத்த வரையிலோ, அவன் சோஷியலிஸத்தைப் புரிந்து வரவேற்று, அதனை வற்புறுத்தும் சோஷியலிஸக் கவிஞனாக, பொது வுடைமைக் கவிஞனாகத்தான் திகழ்ந்தான். எனினும் சோஷியலிஸ இயக்கம் தோன்றுவதற்கு முன்பே மறைத்து விட்ட ஷெல்லியைப் போலவே, பாரதியும் தனது தாய் நாட்டில் சோஷியலிஸ இயக்கம் தோன்றுவதற்கு முன்பே 287