பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து விட்டான். சொல்லப் போனால், தனது தாயகத் தில் 'சோஷியலிஸ சமுதாயம் மலர வேண்டும் என்று விரும்பிய பாரதி மறைந்த ஆண்டில்தான், அதற்கான சூழ் நிலைகளின் தொடக்கம் இந்தியாவில் உருவாகத் தொடங் கியது, அந்த ஆண்டில்தான் இந்திய தேசிய இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் முதன் முறையாக வெகுஜன இயக்கமாக விரிவடைந்தது; பலம் பெற்றது. மேலும் வெகுஜன இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சக்தியாகவும், முன்னணிப்படையாகவும் விளங்கக் கூடிய தொழிலாளர் இயக்கமும் அந்த ஆண்டில்தான் தமிழ்நாட்டில் தொடங்கப் பெற்றது. இன்று தமிழ்நாட்டுத் தொழிலாளர்களால், 'தொழிற் சங்கத்தின் தந்தை' என்று பாராட்டப்படுபவரும், அந்நாளில் பாரதியின் நண்பருமாக இருந்த வி, சக்கரைச் செட்டியார் தமது நண்பர்கள் சிலரது. ஒத்துழைப்போடு சென்னை நகரத்தில் முதன்முதலாக ஒரு தொழிற்சங்கத்தை அந்த ஆண்டில் தோற்றுவித்தார். இவற்றின் மூலம் பாரதி பின் அரசியல், சமுதாய, பொதுவுடைமைக் கனவுகளை நனவாக்குவதற்கான அடித்தளத்தின் தோற்றம் இங்கு உருவாயிற்று. இதற்கும் பின்னரே இந்திய நாட்டில் சோஷியலிஸ இயக்கம் தோன்றியது. - பாரதி 19 21-ம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட '! போதிலும் 'ஷெல்லியின் படைப்புக்கள் எவ்வாறு அவனது மறைவுக்குப் பின்னர் சாசன இயக்கம் போன்றவற்றுக்குத் தோன்றாத் துணையாக நின்று உதவினவோ, அதேபோல் நமது நாட்டின் சுதந்திர இயக்கத்திலும், பாரதியின் கவிதைகள் நமக்கெல்லாம் ஊக்கமும் - உணர்வும் உத்வேக மும் ஊட்டிச் செயல்படத் தூண்டும் தோன்றாத் துணையாக உதவி வந்துள்ளன என்பதையும், இன்றும் நமது சமுதாய லட்சியமான சோஷயிஸத்தை எய்த, அவனது கருத்துக் களும், பாட்டுக்களும் நமக்குப் படைக்கலமாகவே பயன் பட்டு வருகின்றன என்பதையும் நாம் அறிவோம், மேலும் ஷெல்லியின் மறைவுக்குப் பின்னர் அவன் விட்டுச் சென்ற கவிதா 'உத்வேகம் எவ்வாறு இங்கிலாந்தில் சுதந்திர உரிமை களுக்காகப் போராடும் இளங்கவிஞர் பரம்பரையைத் - 288