பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குடாக் கடலில் படகில் சென்றபோது புயலடித்துப் படகு ' கவிழ்ந்தது. மூழ்கிய பட்கோடு ஷெல்லியும் தனது முப்பு தாவது வயது முடியுமுன்னமே, அற்பாயுளில் 182 2-ம் " ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதியன்று மூழ்கி இறந்தான். சில தினங்களுக்குப் பின்னர் உருக்குலைந்த நிலையில் கரையில் ஒதுங்கிய அவனது சடலத்தைக் கண்டெடுத்து, அதனைத் : தகனம் செய்து, அஸ்தியை ரோமாபுரியில் அடக்கம் செய் தார்கள். மேற்குறித்த வாழ்க்கைக் குறிப்போடு பாரதியின் - வாழ்க்கையை ஒப்பு நோக்குங்கால், இருவருக்குமுள்ள சில : ஒற்றுமை வேற்றுமைகள் நமக்குத் தெரியவரும். ஷெல்லி தியைப் போலவே, பாரதியின் பள்ளிப்படிப்பும் வெகுகாலம் நீடிக்கவில்லை: இருவருக்குமே அன்றைய கல்விமுறை பிடிக்க வில்லை. இருவரது வாழ்க்கையுமே ஒரு போராட்டமாகத் தான் இருந்தது. பாரதியின் அரசியல் கருத்துக்கள் அவனது உறவினர் பலருக்கும் பிடிக்கவில்லை. எனினும் அவன் அரசியல் வாழ்வால் ஏற்பட்ட, வறுமை வாழ்க்கையை மனம் தளராமல் ஏற்றுக்கொண்டான். மேலும் ஷெல்வி >யப் போலவே பாரதியும் வேற்று நாடாக இல்லாவிட்டா லும் புதுச்சேரிக்குச் சென்று அஞ்ஞாத வாசத்திலேயே காலம் கழிக்க நேர்ந்தது, ஷெல்லியின் காதல் வாழ்வாலும், அதுபற் றிய கருத்தாலும் அவனுக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டன . ட்வரரதிக்கு அப்படி எதுவும் நேரவில்லை; மேலும் பாரதி காதலை ஷெல்லியைப் போலவே போற்றிப் புகழ்ந்தாலும், ‘‘விடுதலைக் காதல்" என்ற மரபு மீறிய அராஜகப் போக்கை அவன் ஒப்புக்கொள்ளவில்லை, ஷெல்லியைப் போலவே பாரதிக்கும் நீந்தத் தெரியாது. எனினும் காசியில் இருந்த காலத்தில் கங்கை நதியின் மீது படகிலே சென்று வருவதில் , அவனுக்குப் பரமானந்தம் என்று செல்லம்மா பாரதி குறிப் பிடுகிறார்; புதுச்சேரிக் கடற்கரையில், வ.வே.சு , அய்யரைக் கடலில் நீந்தச் சொல்லி, அதனைக் கரையில் நின்று அவன் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தான் என்று வ. ரா, (மகாகவி பாரதியார்) கூறுகிறார். ஷெல்லியைப் போலவே பாரதியின் மரணமும் அகாலமானது தான்; அத்துடன் விபத்தால் நேர்ந்ததுதான், திருவல்லிக்கேணி கோயில்