பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தது. ஒரு ரூபாய்க்குக் கீரைத் தண்டுக் கட்டை வாங்கிச் சுமந்து கொண்டுவந்து அதனை வீடு வீடாகச் சென்று வழங்கியது, பாண்டிச்சேரியில் புயலால் ஏற்பட்ட சேதங் களால் அல்லலுற்ற ஏழை மக்களுக்குச் சிகிச்சையும் உதவியும் செய்தது, நிதி வசூல் செய்து உதவியது முதலிய பற் பல செய்திகளையும் வ. ரா., ஆக்கூர் அனந்தாச்சாரியார் யதுகிரி அம்மாள், செல்லம்மா 'பாரதி' முதலியோர் எழுதியபாரதி வரலாறுகளிலிருந்து நாம் தெரிந்து கொள் இறோம். ஷெல்லி மனிதர்களிடம் மட்டுமல்லாமல் பிராணி களிடத்திலும் கருணையுள்ளம் கொண்டவனாக இருந்தான் மிருகங்களை வேட்டையாடுவது, கொல்வது, உண்பது எதுவுமே அவனுக்கு உடன்பாடல்ல. இதன் காரணமாக அவன் மனப் . பூர்வமான கொள்கைப் பிடிப்போடு மரக்கறி உணவே அருந்தி வந்தான். பிராணிகளிடத்தில் அவன் கொண்டிருந்த ஜீவ ' காருண்யம் நமது பண்டைச் சமண முனிவர்களின் அதீத மான அஹிம்சைக் கொள்கையையே ஒத்திருந்தது என்று சொல்லலாம். கூடை, நிறைய உயிருள்ள மீன்களைச் சுமந்து கொண்டு விற்பனை செய்ய வந்த மனிதனிடமிருந்து, அத்தனை மீனையும் விலைக்கு வாங்கி அவற்றை மீண்டும் தேம்ஸ் நதியில் விட்டு விடுமாறு ஷெல்லி தனது வேலைக்காரன் ஹாரி என்பவ. னிடம் உத்தரவிட்டதாக டௌடன் குறிப்பிடுகிறார் {Life of Shelly-Dowten), பிராமணப் பிள்ளையாகப் பிறந்த பாரதி என்றுமே மரக்கறி உணவே உண்டு வந்தான். மேலும் அவனும் உயிர்க்கொலையையும், மாமிச உணவையும் வெறுத்தான். பிராணிகளிடத்தில் அவன் கொண்டிருந்த அதீதமான அன்பையும் கருணையையும் சமையலுக்கிருந்த அரிசியை எடுத்து சிட்டுக்குருவிகளுக்குப் போட்டது, கடை யத்திலிருந்த காலத்தில் கழுதைக் குட்டியை வாரியணைத்து முத்தமிட்டது முதலிய அவனது செய்கைகளின் மூலம் நாம் அறிவோம். மேலோட்டமாகப் பார்க்கிறபோது இந்தச் செயல்கள் அசட்டுத்தனமாகத் தோன்றலாம்; ஆனால் எல்லா உயிரையும் நேசிக்கும் ஆழ்ந்த கருணையுள்ளத்தின் விளைவுதான்