பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம்! சமத்துவம்! ச ேக ா த ர த் து வ ம்! - மேற்கண்ட - முப்பெரும் கோட்பாடுகளும் பிரெஞ்சுப் புரட்சியில் விளைந்த கோஷங்கள் என முன்னர் பார்த்தோம்,

  • பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தையான ஷெல்லியை இவை.

கவர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே அவனது அரசியல் சமுதாயக் கருத்துக்கள் பலவும் விகாசம் பெற்றன. அதன் மூலம் ஆங்கில இலக்கியத்தின் முதற்பெரும் அரசியல் புரட்சிக் கவிஞனாகவும் அவன் திகழ்ந்தான். பாரதியும் இவ்வாறே இம்முப்பெருங் கோஷங்களையே உயிர் மூச்சாகக்கொண்டு, தமிழ் இலக்கியத்தின் முதற்பெரும் தேசிய அரசியல் கவிஞ னாக விளங்கினான். நிலையற்ற அரசியல் லட்சியங்களைப் பாடிய பாரதியின் தேசிய கவிதைகளும் நிலையற்றவையென் றும், நடைமுறை லட்சியங்களையும், தேவைகளையும் பாடிய காரணத்தால் அவனது தேசிய கவிதைகள் கவிதைத் தரம் குறைந்தவையென்றும் குறை கூறி வந்தவர்கள் அன்றும் இருந்தார்கள்; இன்றும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் அந்தத் 'தரம்கெட்ட நடைமுறை லட்சியங் களையும் உயர்ந்த கவிதையின் அந்தஸ்துக்கு உயர்த்தியவன் பாரதி என்பதை நேர்மையான விமர்சகர்கள் உணர்வார்கள். ஷெல்லியைப் பற்றியும் இத்தகைய கருத்துக்கள் நிலவி வந் துள்ளன, ஆனால் ஷெல்லியின் பெருமையைப்பற்றி வில்லி பம் மார்ட்டன் பேனி என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: