பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சீர்திருத்தவாதிகளின் கூட்டம் சட்ட விரோதமானது எனத் தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு கூடிய கூட்டம் அரசாங்கத்தின் குதிரைப்படைத் தாக்குதலால் கலைக்கப்பட்டது. இந்த அடக்குமுறையில் ஆங்கில நாட்டுத் தொழிலாளி மக்கள் பலரும் மாண்டனர்; படுகாயமுற்றனர். இந்தச் சம்பவம் ஸெயின்ட் பீட்டர்ஸ் பீல்டு என்ற இடத்தில் நடந்ததால், 'வாட்டர்லூ சண்டை' என்பதைப்போல், இதனை 'பீட்டர்லூ சம்பவம்' என்று மக்கள் ஆக்ரோஷத் தோடு குறிப்பிட்டார்கள். இதனைப்பற்றிய செய்தி இத் தாலியிலிருந்த ஷெல்லிக்கு எட்டியது. இந்தச் சம்பவத்தை அவன் ஒரு பெரும் புரட்சியின் முன்னோட்டம் போலவே கருதினான், இந்தச் சம்பவத்தையறிய நேர்ந்த சமயத்தில் தான் அவன் மேற்கண்ட இரண்டு கவிதைகளையும் எழுதி இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தான், தொழிலாளி மக்களுக் கென்று எழுதிய ஆவேசம் மிக்க சுவீதைகள் அவை. ஆனால் இந்தக் கவிதைகள் பிரசுரமாகவில்லை; ஷெல்லியின் மரணத் துக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அனவ அச் சேறின. அன்றைக்கிருந்த அடக்குமுறைதான் அவை பிரசுர மாகாமற் போனதற்குக் காரணம். ஷெல்லி மட்டும் யார்க் ஷைரிலோ, வங்காஷைரிலோ வாழ்வதற்கு எப்போதாவது தீர்மானித்திருந்தால், அங்குள்ள 'இங்கிலாந்தின் மக்க" ளோடு பேசவும், அவர்களுக்காக எழுதவும் அவனுக்குச் சந்தர்ப்பம் கிட்டியிருந்தால், அவன் அங்கு ஒரு பெரும் ஆவேசத்தையே கிளறி விட்டிருப்பான்; அல்லது அரசாங்கத் தையே வியப்புறச் செய்யும் ஓர் இயக்கத்தையே நடத்தி யிருப்பான்" என்று ஷெல்லியின் வரலாற்றாசிரியர் இந்தக் கவிதையைப்பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார் (Shelley-- Edmund Blunden). ஆம், அத்தனை ஆவேசம் மிக்க கவிதைகள் தான் அவை. 91 பாடல்கள் கொண்ட 'அராஜகத்தின் முக மூடி' என்ற கவிதையில் சில பாடல்கள் பின்வருமாறு:-

  • இங்கிலாந்தின் மக்களே! மகோன்னதத்தின் வாரிசு

களே! எழுதாத கவிதையின் வீரர்களே! மாபெரும் ஒரே மாதாவின் குழந்தைகளே! அவளுக்கும், உங்களுக்கும், ஒரு வருக்கொருவரும் நம்பிக்கைகளாய்த் திகழ்வோரே!' 4*