பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sow seed-but let no tyrant reap; - Find wealth-let no imposter heap; , Weave robes---let not the idge wear; Forge arms-in your defence to bear). மேலே கண்ட உதாரணங் சுளின் மூலம் ஷெல்லியின் சுதந்திர தாகத்தையும், சுதந்திர இயக்கங்களை வரவேற்கும் மனப்பான்மையையும், அடக்குமுறையைக் கண்டு சீறியெழும் ஆவேசத்தையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் வன்மையாக எதிர்க்கும் புரட்சிப் போக்கையும் நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். இவற்றை மனத்திலே நிறுத்திக் | கொண்டு நாம் பாரதியி. ம் வந்தால், இந்த அம்சங்கள் அனைத்திலும் அவனுக்கும் ஷெல்லிக்கும் பெருத்த ஒற்றுமை இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷெல்லியிடம் காணப்படும் சில கருத்துக்களின் எதிரொலியையும், ஷெல்லியின் மூலம் பாரதி பயன்பெற்ற தன்மையையும் கூட நாம் கண்டறிய முடியும். பாரதியும் ஷெல்லியைப் போலவே பிரெஞ்சுப் புரட்சி யின் முப்பெரும் கோ ஷங்களையும் தனது தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டவன். 1906-ம் ஆண்டின் முற்பாதியில், அதா வது அவன் தேசிய கவியாக மலர்ச்சி பெற்ற காலத்தில், அவள் தொடங்கிய 'இந்தியா' பத்திரிகையின் தலைப்பி லேயே, 'ஸ்வதந்திரம், ஸ மத்துவம், ஸகோதரத்துவம்" என்ற கோஷங்களைத்தான் அதன் லட்சியமாக அவன் பொறித்திருந் தான் , மேலும், தனது 'குருகோவிந்தர்' என்ற பாட்டில் குருகோவிந்தரின் வாய் மொழியாக இதே லட்சியத்தை அவன் லோக தருமமாகப் பின்வருமாறு பிரகடனம் செய்கிறான்:

  • 'நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்!

ஒன்றாம் கடவுள்; உலகிடைத் தோன்றிய மானிட ரெல்லாம் சோதரர் ; மானிடர் சமத்துவம் உடையார்; சுதந்திரம் சார்ந்தவர்! --(வரிகள் 177-189) மேலும், இவற்றில் அவன் சுதந்திர லட்சியத்தைப் பற்றிப் பலபடப் பாராட்டிப் பாடியுள்ளான் என்பதை நாமறிவோம்,