பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லியைப் போலவே அவனும் உலகில் பல பகுதிகளிலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டு எதிரொலி எழுப்பினான், ஆப்பிரிக்காவிலும், உடல் தீவுகளிலும், பீஜியிலும் நிலவிய அடிமைத்தனத்தைக் கண்டு மனம் கலங்கினான் ; கண்ணீர் வடித்தான். பெல்ஜிய நாடு ஏகாதிபத்தியத்தின் படையெடுப் புக்குத் தனது நாட்டை நடை பாவாடையாக்கச் சம்மதி யாது போரிட்டு வீழ்ந்த வீழ்ச்சியை, அறத்தினாலும், வீரத் தாலும், மானத்தா லும், வண்மையாலும், துணிவிலும் வீழ்ந்த தருமத்தின் வீழ்ச்சியாகக் கண்டு, அந்த நாட்டை வாழ்த்தினான். அதேபோல் ருஷ்ய நாட்டில் ஜார் மன்னன் வீழ்ச்சியுற்று, புரட்சி வெற்றி கண்டதையும் அவன் வாழ் தினான்; 'புதுமை கா ணீர்!' என்று வையகத்தையே வாய் விட்டு அறைகூவி அழைத்தான். இத்தாலிய நாட்டு மாஜினி எழுப்பிய சுதந்திர கோஷத்தையும், பிரதிக்ஞையும் தமிழ் மக்களுக்கு எடுத்தோதினான், ஷெல்லியைப் போலவே பாரதிக்கும் பிற நாட்டுச் சுதந்திரப் போராட்டங்கள் ஆதர்சமாக விளங்கின. எனவேதான் அவன், - -

- மேற்றிசை பல் நாட்டினர். வீரத்தால் போற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்; கூற்றினுக்கு உயிர் கோடி கொடுத்தும் நீரின் பேற்றினைப் பெறுவேம் எனப் பேணினர். - (சுதந்திர தேவியின் துதி-பாட்டு 7) கவிஞன் ஷெல்லி 'சுதந்திரப் பனுவல்' (Ode to Liberty) என்ற பாடலில் ஸ்பெயின் முதல் கிரீஸ் வரையிலுமுள்ள பல்வேறு நாடுகளின் சுதந்திர இயக்கங்களை நினைவு கூர்வது போல் பாரதியும் இங்கு மேலை நாடுகளை நினைவு கூர்கிறான். கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் நகரம் சுதந்திரத்தால் விழிப்புற்ற பின் அங்கு கலாசிருஷ்டிகளும், சிற்ப வடிவங்களும் பெருகி, அமரத்துவம் வாய்ந்தது பற்றி ஷெல்லி பாடியுள்ளதை முன்னர் பார்த்தோம், அதே போன்று பாரதியும் அடிமைப் பட்ட... நாட்டில் கலைகளும் காவியங்களும் மலர முடியாது என்பதை உணர்கிறான்,