பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி! நின் னொளி பெறாத தேய மோர் தேய மாமோ? ஆவி அங்குண்டோ? செம்மை" ஆறமுண்டோ? ஆக்கமுண்டோ ? காவிய நூல்கள் ஞானக் கலைகள் வேதங்க ளுண்டோ ? பாவியார் அன்றோ நின்றன் பாலனம் படைத்தி லாதார் ? -(சுதந்திர தேவி துதி பாட்டு-3) என்று பல கேள்விகளை எழுப்பி, சுதந்திரத்தின் மேன்மையை வற்புறுத்துகிறான். மேலும் அதே கவிதையில், ஷெல்லி சுதந்திர தேவியைப் பலவாறு உவமித்துப் பாடுவது போல், பாரதியும் தனது சுதந்திர தேவியைப் பின்வருமாறு உவ மித்துத் துதி செய்கிறான் : பேரறத் தினைப் பேணுநல் வேலியே ! சோர வாழ்க்கை , துயர் மிடி ஆதிய கலர் அறுக்கக் கதித்திடு சோதியே ! வீரருக்கு அமுதே ! நினை வேண்டுவேன் ! - (பாட்டு 9) இதே போன்று சுதந்திரத்தை 'ஆரமுது' 'விண்ணில் இரவி' 'வண்ண விளக்கு' 'வாராது வந்த மாமணி'

  • கண்ணீரால் காத்த பயிர்' ' வான மழை' என்றெல்லாம்

பாரதி பிற பாடல்களிலும் (சுதந்திரப் பயிர், சுதந்திரப் பெருமைர் பலவாறு உவமித்துக் கூறுவதையும் நாம் காணலாம். ஷெல்லியிடம் ஈடுபாடு கொண்ட பாரதி, சுதந்திர வேட்கையைப்பற்றி ஷெல்வி பாடியுள்ள 'சுதந்திரப் பனுவல்'. முதலிய பாடல்களின் வடிவ அமைதி, பொரு அமைதி முதலியவற்றைத் தானும் சுவீகரித்தது. அதனைத் தன் வழியில் பயன்படுத்திக் கொண்டான் என்றே சொல்லலாம். மேலும், இங்கிலாந்து மக்களை நோக்கி ஷெல்லி பாடியுள்ள சுதந்திர ஆவேசமும், சுரண்டல் எதிர்ப்பும் நிறைந்த இரு கவிதைகளும் பாரதியை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும்