பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லி தனது படைப்புக்களில் சமத்துவக் கொள்கையையும் சுதந்திர லட்சியத்தோடு பின்னிப் பிணைத்தே காண்கிறான். இதனைக் குறித்து நாம் இங்குச் சில உதாரணங்களை மட்டும் பார்க்க லாம். முன்னர் கு றிப் பிட் ட 'நேப்பிள்சுக்கு வாழ்த்துப் பனுவல்' (Ode to Naples) என்ற கவிதையில் ஷெல்லி நேப்பிள்ஸை நோக்கி • * நீ அச்சமற்று உன்னதமாக அமர வேண்டும்; உன்னைக் கண்டு நாசகாலன் வெளிற வேண்டும்; மேலும் உனது சட்டங்கள் சமத்துவமாக இருக்க ' வேண்டும் (Sit thou sublime unawed; be the Destroyer pale! And equal laws be thine, வரி 96-97} என்று பாடு கிறான். இதே போன்று 'இஸ்ல மின் புரட்சி' என்ற தனது காவியத்தில், சுதந்திரத் திருநாள் பற்றிய ஒரு வரு ணனையில், • அந்தப் பெருநாள் பிறக்கும் தருணத்தில் பல்வேறு நாடு களின் அறைகூவலால், உலகத்தின் மீது விழுந்திருந்த விலங்கு கள் பனிமூட்டம்போல் கரைந்து சென்றன; ஒரு புனித மான திருவிழாவை நடத்தவும், வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு சடங்கை நடத்தவும் ஆணை பிறந்தது” (சருக்கம் 5, பாட்டு 37). (“. . . .the eve of that great day Whereon the many nations at whose call The Chains of earth like mist melted away, Decreed to hold a sacred Festival A rite to attest equality to all who live). என்று சமத்துவத்தைச் சுதந்திரத்தின் இன்றியமையாத தேவையாக ஷெல்லி வற்புறுத்துகிறான். அதே காவியத்தின் வேறொரு பகுதியில், நாங்கள் பயம், அடிமைத்தனம், பாத நம்பிக்கை முதலியவற்றைச் சமாதி செய்துவிட்ட கல்லறையின்மீது பூத்திருந்த மலர்களைக் கண்டு புன்னகை புரிந்தோம் ; ஞானத்தின் தீர்க்க தரிசனத்தில், மனிதகுலம் சுதந்திரமாகவும், சமமாகவும், புனிதமாகவும், ஞானம் சான்றதாகவும் இருந்தது” (சருக்கம் 7, பாட்டு 33) என்று