பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக்கான வழிமுறைகளையும் பற்றிய ஞானமும் கணிப், பும், ஷெல்லியைக் காட்டிலும் பாரதியிடம் துல்லியமாக இருந்தன. மேற்காட்டிய மேற்கோள்களைத் தவிர, அவன் தன து கவிதைகளில் வேறு பல இடங்களிலும் சமத்துவத்தை வலியுறுத்தியுள்ளான் என்பதை நாம் காணலாம். மேலும் அவனது வசனப் படைப்புக்களில் (குறிப்பாக, 'சமூகம்* என்ற கட்டுரைத் தொகுதியில் சமத்துவக் கொள்கையைக் காரிய சாத்தியமாக்குவதில் எழும் பிரச்சினைகள் முதலியன வற்றையும் அவன் தெளிவாக ஆராய்ந்துள்ளான் . ஷெல்லிக்கும் பாரதிக்குமுள்ள இந்த வேற்றுமைக்கு இரு வரும் வாழ்ந்த கால வேறுபாடுதான் காரணம். ஷெல்லி யின் காலத்தில் சமத்துவக் கொள்ளை $ சோஷலிஸத்துக்கான இயக்கம் என்ற திட்டவட்டமான அரசியல் போராட்ட வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை. அன்றைய நிலையில் அது நம்பிக்கை தரக்கூடிய மகோன்னதமான மானிட லட்சியக் கனவு என்ற நிலையில்தான் இருந்தது. ஆனால் பாரதியோ ஷெல்லிக்குப் பின்னர் 90 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன். இருவருக்குமிடையேயுள்ள இந்த நூற்றாண்டுக்கால் அலகா சத்தில் சமத்துவக் கொள்கை பெற்ற வளர்ச்சியை மட்டும் மல்லாது, அதன் முதற்பெரும் வெற்றியையும் (1917-ம் ஆண்டின் அக்டோபர் புரட்சி) காணும் வாய்ப்பு பாரதிக்குக் கிட்டியது. எனவே பாரதியின் சமத்துவ லட்சியம் லட்சியக் கனவாக மட்டுமல்லாமல், காரிய சாத்தியமான நடை முறைத் திட்டம் என்ற அளவில் பரிணமிக்க' 'முடிந்தது. இந்த உண்மையை நாம் இங்கு இந்த அளவில் நினைவூட்டிக் கொள்வோம்,