பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர்களும், மத குருக்களும் . பிரெஞ்சுப் புரட்சியின் முப்பெருங் கோஷங்களும் 'குடி யரசுத் தத்துவத்தின் குறிக்கோள்கள். எனவே அவை முடி பரசுத் தத்துவத்துக்கு முரண்பட்டவை என்பதோடு மட்டு மல்லாமல், அதற்குப் பகையும் ஆனவை என்பது வெளிப் படை. இந்தக் குறிக்கோள்களை இளமையிலேயே அங்கீ கரித்து, அந்தப் புரட்சியின் குழந்தையாகப் பரிணமித்த ஷெல்லி அதன் விளைவாக முடியரசையும் வெறுத்தான். மன்னராட்சியை அவன் எந்தவிதத்திலும் அங்கீகரிக்கவில்லை; சொல்லப் போனால், அவன் மறந்தும் மன்னனைப் புகழ்ந்து விடவில்லை. மன்னர்களெல்லாம் ரத்தக் குளிப்பிலே திளைக் கும் கொடியவர்களாகத்தான். ஷெல்லிக்குக் காட்சி தரு கிறார்கள். எனவே மன்னர்களையே ஒழிக்கவேண்டும் என்று அவன் முடிவு கட்டுகிறான். நாம் முன்னர் குறிப்பிட்ட, மார்கரெட் நிக்கல்ஸன் என்ற பெண்ணின் பெயரில் தனது பதினேழாவது வயதில் அவள் எழுதி வெளியிட்ட இளமைக் காலக் கவிதையில் பின்னே , மன்னர்கள் தான் யார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்குப் பின் வருமாறு பதிலும் அளிக்கிறான் :

    • மன்னர்கள். மண்ணைத் தவிர வேறல்ல. இறுதியில்

வரும் மகத்தான நாள், அவர்களது ஆட்சிப்பிடியை இழக்கச் செய்து, அவர்களையெல்லாம் தட்டி நொறுக்கிச் 'சமனாக்கி விடும்; மன்னனின் கையிலுள்ள கோலைப் பறித்து நொறுக் 89