பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Oh! that the free would stamp the impious name , , Of KING into the dust!) இதேபோன்று தனது 'ராணி மாப்' காவியத்திலும் மன் னர்களை யுத்தங்களை உருவாக்குபவர்கள் என்று கடிந்துவிட்டு,

  • 'கோடரியானது அந்த விஷ விருட்சத்தின் வேரில் தாக்கட்

டும்; அந்த விருட்சம்? வீழட்டும்!" (படலம் 4, வரி 83-84) என்று அவன் ஆணையிடுகிறான்: (Let the axe, strike at the root, " The poison tree will fall). இவ்வாறு ஷெல்லி மன்னராட்சியைப் பலவாறும் கண் டித்து அதனைப் போக்க வேண்டுமென்று விரும்பியதால்தான் நாடு பிடிக்கும் ஆசையால், கொடுங்கோலனாக மாறி ரத்தக் களரியிலேயே நடந்து வந்தவனான நெப்போலியன் வீழ்ச்சி யுற்றபோது நெப்போலியன் போனபார்ட்டியின் வீழ்ச்சியின் போது ஒரு குடியரசுவாதியின் உணர்ச்சிகள்” (Feelings of a Republican on the Fall of Bonaparte) என்ற தலைப்பில் எழுதிய தனது கவிதையைப் பின்வருமாறு தொடங்கினான்:

  • 'வீழ்ந்துபட்ட கொடுங்கோலனே! உன்னை நான் வெறுத்

தேன்! லட்சிய தாகமே முற்றிலும் அற்ற உன்னைப்போன்ற அடிமையொருவன் சுதந்திரத்தின் சமாதிமீது குலவையிட்டு நடனமாடியதை எண்ணி, நான் முனகத்தான் செய்தேன்!" (வரிகள் 1-4): (1 hated thee, fallen tyrant! I did groan ' To think that 3 most unambitious slave Like thou, shouldst dance and revel on the grave of fiberty). இதே போன்று போரில் தோற்றுப்போய் ஸெயின்ட் ஹெலினா தீவில் சிறைப்பட்டிருந்த நெப்போலியன் 1821-ம் ஆண்டில் இறந்துபட்ட காலத்தில், அந்தச் செய்தியைக் கேள்வியுற்றதும் ஷெல்வி அவனைக்குறித்து ஒரு கவிதை எழுதினான். பூமித்தாயை நோக்கி வினா விடுக்க, அவள் பதிலளிப்பதாக அமைந்த அந்தக் கவிதையில் பூமாதேவி நெப்போலியனைக் குறித்துப் பின்வருமாறு பதிலளிக்கிறாள்: