பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெப்போலியனது மூர்க்காவேசமான வெறி வேகம் அவனது பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அழிவையே பொழிந்த ஒரு பேய்மழையாக, பயங்கர த் திலும் ரத்தத்திலும் பசுந் தங்கத்தி லும் உருண்டோடியது, .." (வரிகள் 34-36): (Napolean's. fierce spirit rolled, In terror and blood and gold | A torrent of ruin to death from his birth). ' நெப்போலியனின் மரணத்துக்கு முன்பே அவனது கொ டிய தன்மையை உணர்ந்து, அவனை நோக்கி 1 வீழ்ந்து பட்ட கொடுங்கோலனே! உன்னை நான் வெறுத்தேன்! என்று குரல்கொடுத்த முதல் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி என்றுதான் சொல்லவேண்டும். மன்னராட்சியையும் கொடுங் கோன்மையையும் விஷமென வெறுத்த ஷெல்லி, அத்தகைய ஆட்சிக்கு இனியும் எதிர்காலம் கிடையாது என்றே கருதி னான். அவர்களது ஆட்சியை ஒழித்துக் கட்டுவது சுலபம் என்றும் கூறினான். அவனது 'ரோஸலிண்டும் ஹெலனும்' (Rosalind and Helen) என்ற கவிதையில் கூறப்படுகின்ற, (் கவிஞர்கள் தெரிந்து தீர்க்கதரிசன மாகப் பேசுவதுபோல் பேசுகின்ற கதாபாத்திரமான லயனல்' என்ற புரட்சிகரமான இளைஞன் பின்வருமாறு பேசுகிறான்: கொடுங்கோலர்களோ, அல்லது ரத்தவெறி குடி கொண்ட மத நம்பிக்கை கொண்ட மதகுருக்களோதான் என் றென்றும் ஆண்டு கொண்டேயிருப்பார்கள் என்று அஞ்சாதீர் கள். மரணத்தால் அவர்களே கறைப்படுத்தியுள்ள அலைகளைக் கொண்ட மாபெரும் நதியின் கரையிலே தான் அவர்கள் நிற்கிறார்கள். அது ஓராயிரம் படுகுழிகளின் ஆழத்திலிருந்து பொங்கி வருகிறது. அவர்களைச் சுற்றிலும் அது நுரைத்துப் பொங்கி, வீங்கிப் புடைபுடைக்கிறது, ஊழிப்பெரு வெள்ளத் தில் உடைந்து சிதறி மிதக்கும் பொருள்களைப் போல் அவர் களது வாள்களும், செங்கோல்களும் அந்தப் பிரவாகத்தில் மிதந்து செல்வத்தை நான் காண்கிறேன்" (வரிகள் 894-901): (Fear not the tyrants shall rule for ever, . Or the priests of the bloody faitin