பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திரம் போற்றும் சில செங்கோல் மன்னர்களை அங்கீகரித் துள்ள பாரதி, தனது காலத்திலோ, தனக்குப் பின்னர் உதயமாகும் புதிய புரத சமுதாயத்திலோ மன்னர்களுக்கு எவ்வித இடமும் தர முனையவில்லை என்பதையே நாம் காண் கிறோம். புரட்சியின் குழந்தையாகத் தோன்றி, புதிய குடி, யரசைக் காண ஆவல் கொண்ட பாரதி மன்னராட்சிக்கு இனி யும் எதிர்காலம் இல்லை என்பதையும் தெளிவாகவே உணர்ந் தான். எனவேதான் 'குருகோவிந்தர்' என்ற கவிதையில் புதிய தருமத்தை உபதேசிக்கும்போது, அரசன் இல்லாது தெய்வமே அரசா மானிடர் துணைவரா மறமே -பகையாக் குடியரசு இயற்றும் கொள்கையார் சாதி (வரிகள் 94-96) என்று குருகோவிந்தரின் கூற்றாகப் புதிய பாரத சமுதாயத்தை அவன் இனம் காட்டுகிறான்.. - சிற்சில மன்னர்களைப் பாரதி வாழ்த்தியிருந்த போதிலும் மன்னராட்சியைப் பற்றிய அவனது பொதுவான கருத்து எந்தவொரு மன்னனையுமே அனுமதிக்கத் தயாராக 'இல்லை என்பதையும் நாம் காண்கிறோம். மன்னர்கள் என்ற "வர்க்கம் நாட்டுக்குப் பொதுவாகக் கேடுதான் சூழ்ந்து வந்திருக்கிறது என்பதே அவனது கருத்து. இதனை நாம் அவனது “பாரத மாதா நவரத்தின மாலை' : யில் காண் கிறோம். அதிலே காணும் வரிகளாவன : : ........ உலகினுக் கெல்லாம் இற்றை நாள் வரையிலும், அறமிலா மறவர் குற்றமே தமது மகுடமாக் கொண்டோர் 'மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்; பற்றை அரசர் பழியடு படையுடன் சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார். (பாட்டு ரீ) இந்தப் பாடற் பகுதியை நோக்கும்போது, 'ராணி மாப், இஸ்லாமின் புரட்சி' முதலிய கவிதைகளில் ஷெல்லி .