பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, டோல் கேட்டு வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டு வரி, நா ய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்று மதி வரி, இன்னும் எண்ணமுடியாத வரிகளைப் போட்டு, வீடு, வாசல், நிலம், தரை, ஆடு, மாடு, சட்டி, பெட்டி இவை களை ஜப்தி செய்து ஏலங்கூறிக் கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது? என்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகிறது..." 'ஒரு குடியானவன் கொள்ளைக்காரனாக மாறுவதற்கான

  • தர்ம நியாயங்களைத் தேடும்போது மேற்கண்டவாறு

6ாண்ணமிடுவதாகப் பாரதி கூறுகிறான். இந்தக் கூற்றில் அவன் கையாண்டுள்ள அடுக்குத் தொடரும், வார்த்தை களும் வரிப்பளுவின் மீது அவனுக்கு எத்தனை ஆத்திரமும் கடுப்பும் இருந்தன என்பதை நமக்கு எளிதில் புலப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு பல்வேறு வரிகளைப் போட்டு, மக்க ளைக் கசக்கிப் பிழியும் ஆட்சி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவன் உணர்கிறான். எனவே தான் சுதந்திர வேட்கைக்கு ஆளாகா மல் * அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்' உச்சத் தில் கொண்டிருந்த 'பாரத ஜனங்களின் தற்கால நிலைமையைக் கண்டு, அவன் 'நெஞ்சு பொறுக்கு திலையே!' என்று குமுறுகின்ற பாட்டில், பின்வருமாறு பாடு கிறன் {பாட்டு.23: | தந்த பொருளைக் கொண்டே-ஜனம் தாங்குவர் உலகத்தில், அரசரெல்லாம் - அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அ <3 #வார். மக்களிடமிருந்து பெறும் வரிப்பணத்தின் பலத்தில்தான் அரசர்கள் உலகை ஆள்கிறார்கள்; ஆனால் அதே மக்கள் அந்த அரசனைப் பேய் போலக் கருதி அஞ்சுகிருர்கள், இந்த நிலைமையை மாற்ற வேண்டு மென்பதுதான் பாரதியின் குறிப்பு, ஷெல்லியும் இவ்வாறேதான் கருதினான். மன்னன் மக்களை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களே தம்மை அச்சத்தாலும் அறியாமையாலும் அடிமைப்படுத்திக்