பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• இரணியன் போல் அரசாண்ட கொடுங்கோலன், "ஜார் எனும் பேர் இசைந்த பாவி, ஜார் மூடன் என்றெல் லாம் வசை பாடித் தீர்க்கிறான். மேலும் ஜார் ஆட்சியில் நிலவிய கொடுங் கோன்மையை, உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை; பிணிகள் பலவுண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்லுங்கள் உண்டு; உண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதரி, பெருங்கொடுமைச் சிறைபூண்டு: தூக்குண்டே இறப்பதுண்டு; முழுதுமொரு பேய் வனமாம் சிவேரியிலே ஆவி கெட்ட முடிவதுண்டு {புதிய ருஷ்யா-பாட்டு 3} என்றெல்லாம் வருணித்துச் செல்கிறான், ஜார் மன்னனின் கொடுங்கோன்மையைப் பற்றிய சித்திரத்தைப் படிக்கும் போது ஷெல்லியின் 'பீட்டர்பெல்', 'அராஜகத்தின் முக மூடி', 'இங்கிலாந்தின் மக்கள்', "இஸ்லாத்தின் புரட்சி' யில் வரும் கொடுங்கோலனின் சித்திரம், 'சுதந்திரத்துக்கான பனுவலில் வரும் மன்னனின் தன்மை பற்றிய வருணனை முதலியன வெல்லாம் நமக்கு நினைவுக்கு வரும்; ஷெல்லியிடமிருந்து கவி கரித் த , பல்வேறு சித்திரங்களின் எதிரொலிபோல், புதிய ருஷ்யாவின் சித்திரம் நமக்குத் தோன்றும். எனினும் பாரதியின் 'புதிய ருஷ்யா' கொடுங்கோல் மன்னனைப் பற்றிய ஷெல்லியின் சித்திரங்களுக்கு ஈடு ஜோடடாக நிற்கக் கூடிய ஒரு மகத்தான புதிய படைப்பு என்பதில் ஐயமில்லை. ஷெல்லி தனது 'சுதந்திரப் பனுவல்' (Ode to Liberty) என்ற பாடலைப் பின்வருமாறு தொடங்குகிறான்: "ஒரு மகோன்னத மான மக்கள் தேசங்களின் மின்னல் வீச்சை மீண்டும் சிலிர்க்கச் செய்தார்கள்; ஸ்பெயின் தேசத்தின் மீது, வானத் தில் தொற்றித் தாவும் நெருப்பைப் பரப்பிக்கொண்டு, சுதந்திரதேவி இதயத்திலிருந்து இதயத்துக்கும் கோபுரத்தி லிருந்து கோபுரத்துக்குமாகத் தாவிப் பளபளத்தாள்! (முதற் பாட்டு):