பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது 'ராணி மாப்' காவியத்தில் மத குருக்களின் கொடுமையைக் கு றித் துப் பின்வருமாறு கூறுகிறான்; • *உலகம் மதத்தின் இரும்பு யுகத்தின் கீழ் சிக்கி, முக்கி பல்குகின்றது. மதகுருக்களோ தமது கைகளில் நிரபராதி களின் ரத்தம் செக்கச் சிவந்து படிந்திருக்கும் நேரத்தில், . ஒரு சாந்திமயமான கடவுளைப் பற்றித் துணிந்து முணமுணக் சிறார்கள்; அதே சமயம் சத்தியத்தின் ஒவ்வொரு வித்தையும் வேரோடு போர்த்தெறிந்து, அவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கி, உலகையே ஒரு கசாப்புக் கூடமாக்கிக் கொலை புரிகிறார்கள்!"* {உடலம் 7, வரிகள் 43-4 8): {FEarth groans beneath religion's iron age And priests (lare babble of a God of peace . Even whilst their hands are red with guiltless blood Murdering the whole, uprooting every germ of truth, exterminating, spoiling al! Making the earth a slaughter house!). இவ்வாறு மதகுருக்களைக் கண்டனம் செய்யும் ஷெல்லி யின் கவனத்திலிருந்து நமது நாட்டுப் பிராமணர்களும் கூடத் தப்பவில்லை! ஆண்டவனின் பெயரால் நடைபெறும் அக்கிரமங்களைப்பற்றி உ வ யி த் து க் கூறுகின்றபோது, அவற்றால் 'எழும் முனகல்களோடு முயங்கும் விதத்தில் பிராமணர்களும் ஒரு புனித வேதகோஷத்தை எழுப்புவதாக” அவன் பாடுகிறான் ('ராணி மாப்'-படலம் 7, வரிகள் 35-36): (Whilst brahmings raise a sacred hymn To twingle with the goans), இதே போன்று. * தனிமையைப் பற்றி , அவன் தனது இளமைக் காலத்தில் பாடிய பாடலொன்றில் (Solitary) பார்ப்பனீயத்தின் கொடுமையால் துன்பப்பட்ட நம் . நாட்டுப் பறையர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறான்: " தனது சகோதரனின் பகைமையால் வேட்டையாடப் பெற்று, தனியனாகி, மெலிந்து, ஏதோ ஓர் இந்தியத் தோட்டத்தில் இருக்கும் கறுத்த பறையனும்கூட, அன்பு செலுத்தவே