பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியாது போன பரிதாபகரமான பிறவியைப்போல், கர்ப் பான விதி வழங்கிய பானத்தை அத்தனை ஆழமாகப் பருகி யிருக்கமாட்டான்!,.,.,., (பாட்டு 2): (Not the swart pariah in some Indian grove, Lone, lean, and thanted by his brother's hate Hath drunk SO deep the cup of bitter fate As the poor wretch who canriot, cannot dove., ...) தனிமையின் கொடுமையை உணர்த்த, நம் நாட்டில் நிலவிய தீண்டாமையை ஒப்புவமையாக்கிப் பாடுகின்ற ஷெல்லிதான், அந்தக் கொடுமையைச் சாஸ்திர சம்மத மாக்கும் பிராமணீயத்தையும் பின்னர் கண்டித்துள்ளான். இவ்வாறு ஷெல்லியின் பல கவிதைகளிலும் நாம் மதகுருக் களைப் பற்றிய அவனது வன்மம் மிகுந்த கண்டனத்தைக் காண்கிறோம். பாரதி மதவிரோதியல்ல; நாஸ்திகனும் அல்ல, எனவே அவன் மதகுருக்களை அங்கீகரித்தான். அவன் தான் கனவு கண்ட புதிய சமுதாயத்தில் மதத்துக்கும் இடமுண்டு என்றே நிர்ணயித்தான். எனவேதான் “ “பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்” என்று புதிய நீதி வகுக்கின்ற அதே நேரத்தில், *'பரிபூரணனுக்கே 'அடிமை செய்து வாழ்வோம் என்று அந்தச் சமுதாயத்தில் கடவுளுக்கும், பக்திக்கும் உள்ள ஸ்தானத்தையும் நிர்ணயித்து விடுகிறான். மதத்தையும் மத குருக்களையும் அங்கீகரிக்கின்ற பாரதி, மதத்தின் பேரால், கடவுளின் பெயரால் 'நடைபெறும் எந்த விதமான மனிதத் தன்மையற்ற கொடுமையையும், ஏற்றத்தாழ்வையும், சுரண்டலையும், சூழ்ச்சிகளையும் அங்கீ கரிக்கத் தயாராயில்லை. மாறாக, ஷெல்லியைப் போலவே அவற்றை அவன் கடுமையாகத் தாக்கத்தான் செய்கிறான். பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை! என்று கோஷிக்கின்ற பாரதி, ஜாதீய ஏற்ற தாழ்வுகளையும், சுரண்டலையும் சாஸ்திர சம்மதமென அனுமதித்த பார்ப்பனீயத்தை வன்மையாகக் கண்டிக்கத் தயங்கவில்லை.