பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.பாரதியும் பொருளாசை, மன்னர்களின் பொருள் வேட்கை, போர் முதலியவற்றைக் கண்டித்துப் பாடியுள் ளான். மன்னர்களின் பொருளாசை எப்படிப்பட்டது என் பதை, அதைப் பற்றிய அவர்கள் கருத்து என்ன என்பதைத் துரியோதனனின் வாய்மொழியாகப் பாஞ்சாலி சபதத்தில் கூற வைக்கிறான் (பாட்டுகள் 99, 100): நிலையி லாதன செல்வமும் மாண்பும் நித்தம் தேடி வருந்த லிலாமே விலையிலா நிதி கொண்டனம்" என்றே மெய்குழைந்து துயில்பவர் மூடர். ..... குழைதல் என்பது மன்னவர்க் கில்லை கூடக் கூடப் பின் கூட்டுதல் வேண்டும், மன்னர்களின் பொருள்வேட்கையை இவ்வாறு சுட்டிக் காட்டும் பாரதி, பொருள் செய்தலையே புறக்கணித்து விட வில்லை. 'செய்க பொருளை!' என்று ஆணையிட்ட வள்ளு வனின் கூற்றைத் தலைப்பாகக் கொண்டு, அவன் ஒரு கட்டு ரையும் எழுதியுள்ளான் (பாரதி புதையல்-இரண்டாம் பாகம்). மேலும் பொருளின் பெருமையைப் பற்றியும் அவன் தனது 'சுய சரிதையில் பின்வருமாறு பாடியுள்ளான் (பாட்டு -43): 'uெaryருளி லார்க்கிலை இவ்வுல' கென்ற நம் ' 'புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்று காண். பொருளிலார்க்கு இனமில்லை, துணையிலை, பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால் பொருளிலார் பொருள் செய்தல்' முதற்கடன் போற்றிக் காசினுக்கு ஏங்கி உயிர்விடும் மருளர் தம்மிசையே பழி கூறுவன்; மாமகட்கு இங்கோர் ஊனம் உரைத்திலன் இந்த உலக வாழ்க்கைக்குப் பொருள் தேவை. எனவே பொருள் செய்யவேண்டும். ஏனெனில் பொருளில்லாத வறியவருக்குத் துன்பங்கள் பலப்பல. வறுமையை நீக்கப் பொருள் செய்யத்தான் வேண்டும். அது முதற் கடமை