பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் காசு சரசு என்று பொருளாசை பிடித்தலைவர்கள் பழிக்கத் தகுந்தவர்கள், செல்வம் (திருமகள்) பழிக்கத்தக்கவ வல்ல; செல்வத்தின் மேல் ஏற்படும் பேராசைதான் பழிப்புக் குரியது என்று இவ்வாறுதான் பாரதி கருதுகிறான். பொரு வாசையின் காரணமாக, சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற் பட்டிருப்பதையும், செல்வம் ஒரு பக்கமாகக் குவிந்திருப்பதை யும் கண்டவன் அவன், எனவேதான் அவன் “ஏழையென்றும் அடி zைe::ெபன்றும் எவனுமில்லை ஜாதியில்!” என்று விடுதலைக் கோஷம் முழக்கினான். பொருள் தேடுவது பேராசையாக மாறும்போது செல்வம் " 'நாசக் காசு" ஆகிவிடுகிறது என்று கருதுகிறான் அவன். அதற்கு அவனது தந்தையையே உதா ரணம் காட்டி, நாசக் காசினில் ஆசையை நாட்டினன்; நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன் என்று (சுயசரிதை, பாடல் 42) பொருளாசையின் சாபக் கேட்டைக் கூறுகிறான். பொருளின் அவசியத்தை உணர்ந்த உசாரதி, தான் வாழ்ந்துவந்த சமுதாயத்தில் பணம் ஒரு சாபக் கேட்டாக இருந்ததையும் ஷெல்லியைப் போலவே உணர்ந் தான். அவனது 'ஞானரதத்தில் 'மண்ணுலகம்' என்ற அத்தியாயத்தில் காணப்படும் பின்வரும் வரிகள் ஷெல்லியின் கருத்தையே எதிரொலிக்கின்றன எனலாம்: ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழி 12ாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை. ஸார மில்லை; ஸத்துக் கிடையாது; உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாயிருக்கும் வாழ்க்கை . ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டு விட்டால், எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான். ஆனால் ' நான் ஒருவன் சரியாக இருந் தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே? என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென் றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ, மூடா! நீ ஏமாற்றுவதனால் முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடு. மென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று