பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{The name of God Has fenced about all crime with holiness, Flimself the creature of His worshippers Whose names and attributes and passions change, Seeva, Buddh, Foli, Jehovall, God or Lord...) எனவே கடவுளும், அவரது இருப்பை உறுதி செய்யும் 4வதமும் அவரை வணங்குபவர்கள் படைத்த 4.டைப்புக்கள் தான் என்று ஷெல்லி கருதுகிறான். அந்த மதத்தைப் படைத்தவர்களை அவன் மாய்மாலக்காரர்கள் என்றும் பழிக்கிறன்: " நம்பிக்கை, உணர்ச்சி, அன்பு எதுவுமே யில்லாத, முகஸ்துதியின் மூலம் அதிகாரப் பதவிகளுக்கு தளர்ந்து வந்துவிட்ட, உறுத்த முகமும், வெளுத்த தலையும் கொண்ட மாய்மாலக்காரர்கள் ஆடம்பரமும் பொய்களும் மலிந்த ஒரு வாழ்க்கையின் மூலம், தமக்குப் பதவிகளைப் பொழியும் அமைப்யை ஆதரிக்கிறார்கள் . அவர்களிடம் மூன்று வார்த்தைகள் உள்ளன ; கொடுங்கோலருக்கு அவற்றின் உபயோகம் நன்கு தெரியும்; ரத்தசோரி கொட்டும் ஓர் உலகத்திலிருந்து பிய்த்துப் பிடுங்கிய கடனுக்கு, அநியாய வட்டி மூலம் அவர்கள் இரை. போடு கிறார்கள் ; 'கடவுள், நரகம், சொர்க்கம்! என்பனவே அந்த வார்த்தைகள், கடவுளோ பழிவாங்கும் குணம் படைத்த, இரக்கமற்ற, சர்வசக்தி வாய்ந்த ஒரு பைசாசமாகும்; அவரது கருணையோ' ரத்தப் பசிகொண்ட அடங்காத புலி களில் கோபாவேசத்துக்கான ஒரு கேலிப் பெயர்தான்...

  • ராணி மாப்', படலம் 4, வரிகள் 203-213):

(Then grave and hoary-headed hypocrites, Without a hope, a passion, or a love, Who, through a life of luxury and lies, Have crept by flattery to the seats of power Support the system whence their thoncurs flow- They have three words; well tyrants know their, use, Weli pay. them for the loann, with Listury Torn from a bleeding world! God, he!! and heavein!