பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அந்த மனச்சாட்சிச் சுதந்திரத்தை அவர்களுக்கு மறைமுகமாக வழங்கிவிடுகிறன் என்று கூடச் சொல்லலாம். இதனால்தான் மனிதாபிமானியாக விளங்கிய ஷெல்லி என்ற நாஸ்திகனிடம் அவன் பெரும் ஈடுபாடு கொள்ள முடிந்தது , ஆனால் அதே பாரதி ஆஸ்திகர்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள் கடவுளின் பேரால் உலகில் விளைக்கின்ற புன்மைகளையும், அவற்றை நியாயப்படுத்து வதற்கேற்ப, அவர்கள் சாஸ்திரங்களிலே புகுத்திய பொய்மைகளையும் கண்டிக்கத் தவறவில்லை என்பதையும் நாம் அவனது எழுத்துக்களில் பர்க்கக் காண்கிறோம். சாத்திரம் கோடி வைத்தாள்-அவை தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்! மீத்திடும் பொழுதினிலே-நான் பே!டிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் மதக்

  • கொலைகளும், அரசர்தம் கூத்துக்களும்

மூத்தவர் பொய்ந் நடையும்-இள . மூடர்தம் கவலை புரம் அவள் புனைந்தாள். (கண்ணன் - என் தாய்: பாட்டு 9) மேற்காணும் பாடலில் ஷெல்லியைப் போல்வே, பாரதியும் பொய்யான சாஸ்திரங்களின் பெயரால், மன்னர் களும் மதகுருக்களும் நடத்திய கொலைகளை யும் , கூத்துக் களையும் கண்டு, அவற்றை எள்ளி நகையாடுகின்றான். மேலும் கடவுளின் பெயரால் சமுதாயத்தில் அநீதிகளை யும், அக்கிரமங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும், சுரண்டலையும், சூழ்ச்சியையும் நியாயப்படுத்த முனையும் சாஸ்திரங்கள் என்று அவற்றைக் கண்டிக்கின்றான் பாரதி; அதே போல் அவற்றை ஆதாரம் காட்டுகின்ற ஆஸ்திகர்களையும் அவன் கடியத் தவறவில்லை. இதற்கான சான்றுகளை அவனது . கவிதைகள், வச னப் படைப்புக்கள் ஆகிய இரண்டிலுமே நாம் பரக்கக் காணமுடியும். பல்வேறு மதங்களும் பல்வேறு நாம ரூபங்களிலே அறிமுகப் படுத்துகின்ற கடவுள் குற்றங்களை வேலியிட்டுக்