பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கின்றார் என்றும், அவரே அவரைப் படைத்தவர்களின் கைக்கருவியாகத்தான் பயன்படுகின்றார் என்றும் ஷெல்லி கருதுவதை முன்னர் பார்த்தோம். தெய்வ நம்பிக்கை கொண்ட பாரதியோ இந்தக் கருத்தை முற்றிலும் ஆதரிக்க வில்லை. பாரதிக்குக் கடவுள் படைக்கப்பட்ட கருவியாக இல்லை; மாறாக, மனித சமூகம் கண்டுணர வேண்டிய - உண்மையாகத்தான் கடவுள் தத்துவம் உள்ளது. எல்லா வற்றிலும் இறைவனைக் காண வேண்டுமென்பதே அவனது உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை; ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலுமுயிர் வகைமட்டும் அன்றி, இங்குப் பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்; வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம் மேலும் இங்குப் பலப்பலவாம் தோற்றம் கொண்டே இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம். (பாரதி அறுபத்தாறு-1 8)

  • பாரதிக்குப் பிரபஞ்சமும், பிரபஞ்ச ராசிகளும்,

சேதன அசேதனப் பொருள்கள் அனைத்தும் தெய்வமாகக் காட்சி தருகின்றன இதனையே அவன் தனது ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டில் தத்துவார்த்தத் தெளிவோடு பின்வரு உமாறு வெளியிடுகிருன்: எல்லை யில்லாத உலகில் இருந்து எல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம் எல்லை யிலாதன ஆகும்-இவை . யாவையுமாய் இவற்றுள் உயிராகி . எல்லையில்லாப் பொருள் ஒன்று தான். . இயல்பறிவாகி இருப்பதுண்டென்றே சொல்லுவர் உண்மை தெளிந்தார்--இதைத் தூவெனி யென்று தொழுவர் பெரியோர். நீயும் அதனுடைத் தோற்றம்.............. (பாட்டு 18, 19, 20)