பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாரதி தமிழ் பூரீமதி ஆனி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலே தலையிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தே மாதரம் ஒன்றே ஜீவ மந்திரம் என்றும் பேசத் தலைப்பட்டது மேற்படி ராமராயருக்கு சம்மதமில்லே. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும் , லெளகிக விஷயங்களைத் துளிகூட கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம். வேதவல்லி அம்மை ராமராயரை கோக்கிச் சொல்லுகிருர் :“ எடுத்ததற்கெல்லாம் ஆனி பெஸண்ட் சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக் கத்திக் கொண்டிருந்தீர். இப் போது அந்த அம்மாள் சுயராஜ்யம் கல்லதென்று சொல்லும் போது அவளேப் புறக்கணிக்கிறீர் 1 ஐயோ! கஷ்டம் ! புருஷ ஜன்மம் ! ஸ்திரீகளுக்குள்ள திறமையிலே காளிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட் டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம், அதனால் சரீர உறுதி அதி கம் என்று ருஜ-வாக்கியாயிற்று ; புத்தி அதிகமென்பதுந்தான். ராமாயணத்தில் சீதை பொய் மானே மெய் மான் என்று கினேத்து ஏமாற்றம் அடைந்தாள், என்று எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக் கொண்டிருந்தார். அந்தச் சீதை சொல்லுக் குக் கட்டுப்பட்டு அதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்கு புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்துக் கொண்டு வாயில் கொழுக்கட்டையை போட்டுக் கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை” என்று வேதவல்லி சொன்னுள். ' ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம் ' என்று ராம ராயர் சொன்னர். வேதவல்லியம்மை சொன்னர் : “ ஆனி பெஸண்டுக்கு ஸமான மாக கம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்த அம்மாள் கவர்ன ருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்திரா ? அந்த மாதிரி கவர் னரிடத்தில் நீர் பேசுவீரா? ' இதைக் கேட்டவுடன் ராமராயர், ' நான் வீட்டுக்குப் போய் விட்டு வருகிறேன்' என்று சொல்லி எழுந்து கின்ருர். நான் இரண்டு கட்சியையும் ஸமாதானம் பண்ணிக் கடைசியாக வேத