பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தமிழ் நாட்டு நாகரிகம் தமிழ் நாகரிகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்திலே பொதுப் படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்கு அவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கின்றேன். பண்டைத் தமிழ் நாகரிகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமாக ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில், தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரிகத்துக்கும் எப் போதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலே யாளத்து நாகரிகமோ ஸ்திரீகளே முன்னிட்டு விளங்குவது. மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும் புராதனமான மலை யாள பாஷையும் ஒரே வஸ்து தான். பிற்காலத்திலும் சேர நாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேர ரனைவரும் தமிழரசரே , தமிழ் நாட்டு வேந்தருள்ளே சேர்த் தென்னப்பட்டு வந்தனர். பாஷையை யொப்பவே நாகரிக விஷ யத்திலும் மிகப் பழைய தமிழ் நாகரிகமும் மிகப் பழைய மலே யாள நாகரிகமும் ஒரே வஸ்துதான். பிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்ட மலேயாள நாடு பழைய தமிழ் நாகரிகத்தை இயன்றவரை சிதையாமல் காப் பாற்றிக் கொண்டு வந்தது. மலையடிக்கு கிழக்கே மைதானத் தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ் நாகரிகமோ வெனில், தெலுங்கு முதலிய வட நாட்டுப் பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள் அதிக மாறுதல் பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரி கத்தை அனுசரித்து வருவதாயிற்று. எனினும், மலையாளத்துப் பழக்கம் ஒரு போதும் நீங்கவே யில்லை. மலைநாட்டு ஆண் மக்கள் உலகமெங்கும், புலி, கரடி, ஒநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடியும், மலை வெப்பத் துக்கும் மலே மழைக்கும் மலைப்பனிக்கும் மலைத் தீக்கும் தப்பி யும், கஷ்டத்துடன் பிழைக்க வேண்டியவர்களாதலால், மைதானங் பr-7