பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாரதி தமிழ் செய்கை நெறியுணராமல் புதிய வகுப்புக்கள் ஏற்படுத்திக் கொள்ளுகிருர்கள். கடையத்து வேளாளரில் இங்கிலீஷ் படித்த சிலர் தாங்கள் " திராவிடப் ப்ராமணர் ' என்று பெயர் வைத்துக் கொண்டு பரம்பரையாக வந்த பிள்ளே ’ப் பட்டத்தை நீக்கி " ராயர்' பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிருர்கள். திருஷ்டாங் தமாக ஒருவருக்கு ' ஆண்டியாப் பிள்ளே ' என்ற பெயர் இருங் தால், அவர் அதை ஸர்க்கார் மூலமாக ஆண்டியப்ப ராயர் ' என்று மாற்றி அப்படியே ஸ்கல விவகாரங்களும் கடத்துகிருர், இந்த திராவிடப் ப்ராமணரின் பட்டம் எப்படி நேரிட்டது என்பதைக் கண்டு பிடிக்க வழியில்லை. இங்ங்னமே சில தினங்களின் முன்பு வள்ளுவர்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கூட்டம் கூடித் தாங்கள் உயர்ந்த ஜாதியாரென் றும் மற்றப் பறையர்களைத் தொடக்கூடாதென்றும் அவர்களுக்கு பஞ்சாங்கம் முதலியன சொல்லக்கூடாதென்றும் அவ்வாறு செய் யும் வள்ளுவர்களேக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் துண்டுப் பத்திரிகைகள் போட்டிருந்தார்களாம். இதைக் கண்டு மனம் பொறுக்காமல் வள்ளுவக் குலத்தைச் சேர்ந்த ரீமான் வி. எல். பெருமாள் நாயனர் என்பவர் "வள்ளுவர் பறையரே, பஞ்சமரே' என்பதை மிகவும் தெளிவாக ருஜுப்படுத்தி சென்ற வியாழக் கிழமை (ஜூன் மாதம் 8-ம் தேதி) சுதேசமித்திரனில் ரஸமான வியாஸ்மொன்று எழுதியிருப்பதைக் கண்டு என் மனம் சால மகிழ்ச்சியெய்திற்று. ஆனல், அதே வியாஸத்தில், காயனர் கான்காம் வகுப்பாகிய வேளாளர் குலத்திலிருந்து பறையர் பிரிந்தாரென்று சொல்லுவது பொருத்தமில்லாத வார்த்தை. இவர் எந்த ஆதாரத்தில் இங்ங் னம் சொல்லுகிருர் என்பது விளங்கவில்லை. வெறும் ஜாதி விரோதத்தாலேதான் இங்கினம் சொல்லுகிருரென்று தோன்று கிறது. வீண் பகைமைகளால் கன்மை ஏற்படாது. எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார் கள். மாம்ஸ் போஜனம் செய்யும் வகுப்பினர் அதை நிறுத்தி விட வேண்டும். பிறகு ஸ்வாமி விவேகாகக்தர் சொல்லியபடி, எல் லாரையும் ஒரேயடியாக பிராமணராக்கி விடலாம். கீழ் ஜாதி