பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய உலகம் 115 ஒரு செட்டி வியாபாரத்தில் ஏழையாய் கொந்து போய் தனது வீட்டுப் பஞ்சாங்கத்தையரிடம் பணக்காரனவதற்கு என்ன செய்யலாம்? என்று கேட்டான். நவக்ரஹ பூஜை நடத்த வேண் டும் என்று அய்யர் சொன்னன். எவ்வளவு பணம் செலவாகு மென்று செட்டி கேட்டான். பத்துப் பொன்குைமென்று பார்ப் பான் சொன்னன். அதற்குச் செட்டி சொல்லுகிருன் :- என் னிடம் இப்போது கொழும்புக்காசு, தென்னேமரம் போட்டது, ஒற்றைக்காசு கூடக் கிடையாது. இந்த கிலேமையில் என்ன செய் தால் பணம் கிடைக்குமென்று உம்முடைய சாஸ்திரம் பேசுகிறது. அதைச் சொல்லும்' என்ருன். அப்போது பார்ப்பான் சொன்னன் :-" நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்க மாட்டாய். அதனல் இந்த ஜனமத்தில் உனக்கு இந்த கிலேமை ஏற்பட்டது. உனக்குப் பிராயச் சித்தம் நம்முடைய சாஸ்திரத்தில் கிடையாது. இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிற வியில் உனக்குச் செல்வமுண்டாகலாம்." இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸப்பட வில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்ருெரு மனிதனகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானல், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாப மும் இல்லை. அதைப் பற்றி எனக்கு அதிக சிரத்தை இல்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு. எவ்விதமான மிருகமும் பகூவியும் கூட்டம் கூடி கr கட்டித் தன் குலத்தைத் தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை. மனித ஜந்து ஒன்றுக்கே இவ் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஹோமர் காலமுதல் கான்ஸ்டன்டைன் ராஜா காலம் வரையிலும் யவன தேசத்தில் போர் கிற்கவில்லை. புயற் காற்ற டித்த இரவிலே கூட களவு கிற்கவில்லை. தீமை எக்காலத் திலுமுண்டு. விஷத்துக்கு மாற்றும், நோய்க்குத் தீர்வும், மிடிமைக்குச் செல்வமும், மடமைக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம். தேட வேண்டுமானல், அதற்கு உபாயங்களும் எல்லார் காலத்திலுல் ஒன்ருகவே யிருப்பதன்றி மாறுபடுவதில்லை. மனிதர்