பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பாரதி தமிழ் கருவிகளேயே மாற்றுகின்றனர். மற்றப்படி பழமையை விடா மல் நடத்தி வருகிருர்கள். ஒரு வியாபாரத்தில் ஒரு லாபம் கிடைக்க வேண்டுமானல், ஒரேயடியாக ஸ'அர்யமண்டலத்துக்குத் தாவிப்போக முடியாது. பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடியாகத்தான் போக வேண்டும். பதறின காரியம் சிதறும். மெதுவாகச் செல்வோனே குறியடைவான். பழைய வழிதான் நல்ல வழி. அது தான் எப்போதுமே நடக்கக் கூடிய வழி. உலகத்தில் எல்லாக் காரியமும் படிப்படியாகத்தான் ஏறுகிறது. படீலென்று ஏறினல், படீலென்று விழ நேரிடலாம். காற்ருடி துள்ளிப் பாய்கிறது. சூரியன் ஒரே கணக்காக நடக்கிருன். அவன் நெறிமாறுவதில்லை, தாழ்ப்பதில்லை, செல்லுகிருன்; எப்போதுமே ஏறிச் செல்லுவான். பழைய வழிதான் வியாபாரத்துக்குச் சரியான வழி.