பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனர் ஜன்மம் 151 இந்த ஆரிய ஸம்பத்தை உலகம் உள்ளவரை ஸ்ம்ரக்ஷணம் செய்து, மேன்மேலும் ஒளியும் சிறப்பும் உண்டாகும்படி செய்யுங் கடமை தேவர்களால் பாரத ஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும். இடையில் நமக்கு நேர்ந்த கேடு இந்த ஆரிய ஸம்பத்தை நாம் பல பல நூற்ருண்டுகளாக ஆதரித்துக் கொண்டு வந்தோம். சென்ற சில நூற்ருண்டுகளாக இதில் துருப் பிடிக்க இடங் கொடுத்து விட்டோம். தேவர்கள் கமக்குக் கொடுத்த கடமையை கர்வத்தாலும், சோம்பலாலும், சிறுமையாலும் உல்லங்கனம் செய்யத் தொடங்கினேம். தேவர்கள் 'இந்த பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக் கடவது!" என்று ஆசீர்வாதம் பண்ணினர்கள். மலைப் பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா ? அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம் மலைப் பாம்பு சுகமாக குறட்டை விட்டுத் துரங்குமாம். செல்லரித்துக் கொண்டு போனது கமது ஸ்மரணையிலே தட்டவில்லை. அத்தனே கர்வம், அத்தனே கொழுப்பு, அத்தனே சோம்பர். நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று, ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளி முள்ளும் போன்ற பாதை நமது கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்ற லாயிற்று. கவிராயர் 'கண்’ என்பதை 'சக்கு' என்று சொல்லத் தொடங்கினர். ரஸம் குறைந்தது ; சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது ; பின்னல் திறமைகள் அதிகப்பட்டன. சவியுறத்தெளிந்து தண்ணென்ருெழுக்கமும் தழுவிச் சான்ருேர் கவியெனக் கிடந்த கோதாவரியினே வீரர் கண்டார் என்று கம்பன் பாடியிருக்கின்ருன். 'சவி என்பது ஒளி ; இது வடசொல் , கம்பன் காலத்தில் அதிக வழக்கத்திலிருந்தது போலும். ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த) நடையுடைய தாகி, ம்ேலோர் கவிதையைப் போலக்கிடந்தது கோதாவரி நதி' என்று கம்பன் வர்ணனை செய்கிருன். எனவே, கவிதைகளில்