பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனர் ஜன்மம் 155 மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது, அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச் சத்தைக் கொண்டு அஞ்சும்) ஆந்தை. ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தைத் அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவ னென்றும் சொல்வதற்குரியவனவான். மிருக ஜன்மங்களே நாம் ஒவ்வொரு வரும் கூடிணந்தோறும் நீக்க முயல வேண்டும்.