பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம் 16.1 கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, தோல்கேட்டு வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, ஆட்டு வரி, காய் வரி, பூனே வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, இன்னும் என்ன முடியாத வரி களைப் போட்டு, வீடு வாசல், கிலம் கரை, ஆடு மாடு, சட்டி பொட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் பணத்தை காம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது?’ என்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகிறது. இவ் விதமாக ஆட்சேபனை ஸமதானங்களால் தம் மனதில் கொள்ளை யடித்துப் பிழைப்பதே நல்லதென்று ஒரு தீர்மானம் செய்து கொள்ளுகிருன். இந்தத் தீர்மானம் அவன் பிறவிக் குணத்துக்கு விரோதமாய் இருப்பினும், தர்ம சாஸ்திரத்திற்கு முற்றும் ஒவ்வாததாய் இருப்பினும், கால சுபாவம் என்ற அவசியத்தால் ஆப்த தர்மமாக அவன் சித்தத்தில் நிலைத்து விடுகிறது. இதை ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டு அவன் காரியங்களே ஆரம்பிக்கிருன். சிலர் இதை நல்லதென்று சொல்லுவார்கள். எவன் எதைச் சொல்லினும், எவர் எதைச் செய்யினும், தான் கொண்டதே கொள்கை யென்று அவன் காலத்தைக் கழித்து வருகிருன். அவன் கொள்கைக்கும் செய்கைக்கும் ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் ஒன்றை யொன்று அடுத்துத் தொடர்ந்தே வருகிறது. அவன் மைேதிடம் வாய்ந்த புருஷன் என்றே சொல்லலாம். ஒரு கொள்கை என்ப தென்ன? இதை நாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிருர்கள். பகுத்தறியும் சக்தி இல்லாத எவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவ கைவே இருக்க வேண்டும். ஒரு கிராமம் இருக்கிறது. அதில் வசிப்பவர்கள் ஒரே ஜாதி அல்லது வகுப்பைச் சேர்ந்தவர்களாக யிருக்கிருர்கள். எல்லாரும் கள்ளர்கள். தலைமுறை தலைமுறை யாக அவர்களுக்குக் கொள்ளையே ஜீவனுேபாயம். அந்த ஊரில் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் அப்பன் திருடன், பாட்டன் திருடன், முப்பாட்டன் திருடன், அண்டை வீட்டுக் ur- l l