பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான ரதம் 167 கொள்கிருய் ' என்றது. உடனே ஞானமாகிய ரதத்தைக் கொண்டு தயார் செய்துவைக்கும்படி எ ன து சேவகனகிய 'ஸங்கற்ப'னிடம் கட்டளையிட்டேன். ரதம் வந்து கின்றது. அதில் ஏறிக்கொண்டேன். ஆனல் எனது ஞானரதம் மற்றவர் களுடையதைப்போல் அத்தனே தீவிரம் உடையதன்று. எளிதாக நெடுந்து ரங் கொண்டுபோகத் தக்கதும் அன்று. கொஞ்சம் கொண்டி. என்ன செய்யலாம் ? இருப்பதை வைத்துக்கொண்டு தானே காரியங் கழிக்கவேண்டும்? ஆகவே, அந்த ரகத்தின்மீது ஏறிக்கொண்டேன். அதிலேறி நான் கண்டுவந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களுமே இந்தப் புஸ்தகத்தில் எழுதப் படுகின்றன. முதல் அத்தியாயம் உபசாந்திலோகம் (கவலையற்ற பூமி) எனது ஞானத் தேரை நோக்கி இந்த rணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்குக் கொண்டு போ' என்று எண்ணினேன். ஆஹா இந்த ரதத்தை வைத்துக் கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும், மன உளேச்சலும் இல்லாதிருக்க வழிதெரியாமல் போய்விட்டதே ! எத்தனே நாள் எனது மனம் துாண்டிற் புழுவைப்போலத் துடித் துக்கொண்டிருக்க, அதை கிவிருத்தி செய்வதற்கு யாதொரு உபாயமும் அறியாமல் பரிதபித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலைகளை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென் கிறது. அவற்றுக்குள்ள விஷ சக்தியை என்னென்பேன்? ஒருவ னது முகத்திலுள்ள அழகையும், குளிர்ச்சியையும் இளமையை யும் இந்தக் கவலைகளே அழித்து விடுகின்றன. கண்களின் ஒளியை மாற்றிப் பசலேயும், உடல்நிறம் மங்குதலும் உண்டாக்கி விடுகின்றன. நெற்றியிலே வரிகளும் கன்னங்களிலே சுருக்கங் களும், இந்த சேக் கவலைகளினலேயே ஏற்படுகின்றன. எனது தொண்டையின் இனிய குரல்போய், கடுரமான கரகரப்புச் சத்தம் உண்டாகிறது. மார்பிலும், தோளிலும் இருந்த வலிமை நீங்கிப்போய் விடுகிறது. இரத்தம் விரைவாக ஓடுதலின்றி, மாசு