பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாரதி தமிழ் துடன் வந்தேன்' என்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கடகடவென்று குலுங்கக் குலுங்க நகைக்கலாயினன். 'ஏனையா சிரிக்கிறீர்?' என்று கேட்டேன். அவன் மறுமொழி கூருமல் சிரித்துக் கொண்டிருந்தான். ஏழை மனமோ கிமிஷத்துக்கு கிமிஷம் அதிகத் திகிலுறு வதாயிற்று. எனக்கு மிகவும் திகைப்புண்டாய்விட்டது. எனவே கோபத்துடன் வாயில் காப்பான நோக்கி, ' ஏனப்பா உள்ளே போகலாமா, கூடாதா ? ஒரே வார்த்தையில் சொல்லிவிடு. கலகலவென்று சிரித்துக் கொண்டிருக்கிருயே ? ' என்று கேட்டேன். அதற்கு வாயில்காப்பான், ' உனக்கும் உபசாந்திக்கும் வெகு துாரம் ” என்று தனது வாய்க்குள்ளேயே (ஆனால் எனது செவி யிலே படும்படி) முணுமுணுத்து விட்டு பிறகு ' கோபம் கொள்ளாதே அப்பா, நீ உபசாந்தி லோகத்தை ஏதோ நாடக சாலை போலக் கருதிப் பார்த்துவிட்டு திரும்ப உத்தேசமிருப்ப தாகக் கூறியது எனக்கு கைப்பை உண்டாக்கிற்று. சாதாரண மாக, இவ்வுலகத்துக்கு வருபவர்கள் திரும்ப வெளியேபோகும் வழக்கம் கிடையாது ' என்று இரைந்து கூறினன். " அது சரி. உள்ளே நாங்கள் பிரவேசிக்கலாமா, கூடாதா ? தயவு செய்து சொல்லும் ! " " நீ ஸாதாரணமாய் பிரவேசிக்கலாம். இது ஸ்கல ஜீவர் களுக்கும் தாய்வீடு. இங்கு வரக்கூடாது என்று எந்த ஜீவனே யும் தடுக்க எனக்கு அதிகாரமில்லை. ஆனல் வைராக்கியக் கோட்டையைக் கடந்து உள்ளே செல்லும் உரிமை உன்னுடன் வந்திருக்கும் மனம் என்ற பொய்ப் பொருளுக்குக் கிடையாது. அது உள்ளே போகுமானல், அக்கினி லோகத்திலே பிரவேசித்த பஞ்சுப் பொம்மை போல காசமடைந்துவிடும்' என்ருன். மனம் ஆரம்பத்திலேயே உபசாந்திலோகம் என்ற பெயரைக் கேட்டவுடன் நடுங்கத் தொடங்கியதற்கும், அது என்னே அங்குப் போகவேண்டாமென்று பிரார்த்தனைகள் செய்ததற்கும், கோட்டையருகே வந்தவுடன் தர்ம தேவதையின் முன்வந்து கிற்கும் கொடுங் கோலரசரைப் போல் கிலே மயங்கி அதற்கு அளவு கடந்த திகிலுண்டானதற்கும் காரணம் இன்னது என்