பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சந்திரிகையின் கதை பூகம்பம் பொதியைமலைச் சாரலில் வேளாண்குடி என்ருெரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினல் லே, மலேச் சிகரங்களும் குன்று களும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள், எனவே, காலை யில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணியமான பrகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும். இந்த ஊரில் மற்ற வீதிகளினின்றும் ஒதுக்கமாக, மேற்றிசை யில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி இருந்தது. அந்த அ க் ர ஹார த் தி ல் குழந்தைகளெல்லாம் எப்போதும் பகதிகளின் காதங்களுக்கிடையே வள ர் ங் த து பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக் குழந்தைகள்- விசேஷமாகப் பெண் குழந்தைகள்-பேசும்போது, ஸாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையை குயில்கள் போலவும், கிளிகள் போலவும், நாகன வாய்ப்புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின. அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் ஸங்கிதிக்கெதிரே படுத்துக் கொண்டு ஸ்வாமியை கோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பதுபோல் அசை போட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணுேரத்தைக் கொத்துவதுபோல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்து கொண்டிருக்கும். இதையெல்லாம் மரக்கிளைகளின் மீதுள்ள பகதிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.