பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரிகையின் கதை 183 இருந்த மஹாலிங்கையருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையு மிருந்தனர். இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறை காற்றும் மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு பூகம்பத்துடன் முடிவு பெற்றன. அரை மணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை-அவள் பெயர் விசாலாகழி-வெளியே வந்து பார்த்தாள். எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பகூவிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்துகிடந்தன. முழுக் காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றிலுைம் மழையிலுைம் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களே மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை எனினும் தன் வீட்டில் எல்லோரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால் மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டு மென்றும் அது கொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊஹித்துக் கொண்டாள். அப்பொழுது, மீளவும் அவ ளுடைய மனதில் சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங் கர்மான செய்திகள் கினைப்புறலாயின. பூகம்பம் தோன்றின வுடனே மஹாலிங்கையருடைய பிதாவாகிய கிழவர், “ஐயையோ, பூமி ஆடுகிறதே ! நரமெல்லோரும் வாயிற் புறத்திலுள்ள குச்சிலுக்குப்போய் விடுவோம். என்னை அங்கே கொண்டு விடுங்கள் ' என்று அலறிஞர். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாகூஜியின் செவியிற்பட்டது. அப்புறம் கடந்த பேச் சொன்றும் அவள் செவியிற்படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்த படியே அங்கு வர வழியில்லை. எனினும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடையபேரோலம் மாத்திரம் புயற் காற்ருெலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற் பட்டது. ஆனால், அங்ங்னம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் ஸ்ாத்தியமில்லை யென்பதை அவள் உடனே ஊ ஹறித்துக் கொண்டாள். ஏனெனில் உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற் கதவைத் திறந்தன்ருே, திண்ணையிலேறி அதன் வழியாகத்