பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாரதி தமிழ் சுந்தரராஜுலு நாயுடு கட்டிலின் மீது படுத்துக் கொண்டு, சிறிது நேரம் வீணையைக் கேட்டுக் கொண்டிருந்து, சீக்கிரத்தில் குறட்டை விட்டு கித்திரை செய்யத் தொடங்கி விடுவார். ஆனால், மகா ராஜன் குறட்டைச் சத்தத்தால் வீணேச் சத்தம் கேளாதபடி செய்து விடமாட்டார் ; இலேசான குறட்டைதான். வெளி முற்றத்தின் ஓர் ஒரத்திலே, நான் மட்டும் எனது பிரம்மசாரிப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணே நாதம் முடிவுறும் வரை, என் கண்ணிமைகளைப் புளியம் பசைபோட்டு ஒட்டிலுைம் ஒட்டமாட்டா. மீனம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளும் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் துரங்கிப் போய்விடுவாள். கீழே, எனது தாயார், தமையனர், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கி விடுவார்கள். எனது தமையனர் மனேவி, வயிற்றிலே சோற்றைப் போட்டுக் கை கழுவிக் கொண்டிருக்கும்போதே குறட்டைவிட்டுக் கொண்டிருப்பாள். இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும். தமையனருக்குக் கோட்டையில் ரெவின்யூ போர்டு ஆபிஸிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ப்ரமோஷன்.' வஸந்த காலம், நிலாப்பொழுது, கள்ளிரவு நேரம். புரசை பாக்கம் முழுவதும் கித்திரையிலிருந்தது, இரண்டு ஜீவன்கள் தான் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்ருென்று அவள். கந்தர்வ ஸ்த்ரீகள் வீணே வாசிப்பதுபோல மீனம்பாள் வாசிப் பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்த்ரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினறு இருக்கும். கதையை வளர்த்துக் கொண்டு ஏன் போகவேண்டும் ? மன்மதன் தனது அம்பொன் றின் முனையிலே என் பிராணனைக் குத்தி எடுத்துக் கொண்டு போய் அவள் வசம் ஒப்புவித்து விட்டான். அடடா அவளது இசை, எவ்வளவு நேரம் கேட்டபோதிலும், தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்தில் தோன்று வதுபோல. அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுங்தர ராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ்