பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு γ மீன : "ஆனால், கான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட் டிருக்கிறேன் என்று சொல்லுகிருய்! " பார்த்தாயா, பார்த்தாயா ! என்ன வார்த்தை பேசுகிருய் ? நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே, என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். இப்போது எனது உயிருக்கு வேருெரு கடமை ஏற் பட்டிருக்கிறது. அவ்விஷயத்தில் உனது கட்டளையை எதிர் பார்த்திருக்கிறேன் என்றேன். அவள் ஏதோ மறுமொழி சொல்லப்போள்ை. அதற்குள் வாயிற்புறத்தில் ஒரு வண்டி வந்து கிற்கும் சப்தம் கேட்டது. நாயன்ன வந்துவிட்டார், நான் போகிறேன் என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள். குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டை களேயெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரை நாழிகைக் கெல்லாம் தமது தொழிலை ஆரம்பித்து விட்டார். இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; அவள் மற்ருென்று. அத்தியாயம் 2 மேல் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி நிகழ்ந்ததற்கு அப்பால், சில மாதங்கள் கழிந்துபோயின. இதற் கிடையே, எங்களுடைய விவகாரத்தில் பல மாறுபாடுகள் உண்டாயிருந்தன. வந்தே மாதரம் மார்க்கத்தில் நான் பற்று உடையவன் என்பதை அறிந்த ராவ்பகதூர் எனக்குத் தமது கன்னிகையை மணஞ் செய்து கொடுப்பது என்ற சிந்தனையை அறவே ஒழித்து விட்டார். சில மாதங்களாக, அவர் தமது சாச்வத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசைபாக்கத் துக்கு வருவதை முழுவதும் கிறுத்திவிட்டார். இதனிடையே, மீளும்பாளுக்கு வேறு வரன்கள் தேடிக்கொண்டிருந்ததாகவும்