பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பாரதி தமிழ் பிரஸ்தாபம் ஏற்பட்டது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை. ஒருவேளை முழுதும் மறந்துபோய் விட்டாளா ? பெண்களே வஞ்சனையின் வடிவம் என்று சொல்லுகிருர்களே, அது மெய்தான பெண்ணெனப்படுவ கேண்மோ. . . . உள் நிறைவுடையவல்ல, ஒராயிர மனத்தவாகும் ' என்று நான் சீவகசிந்தாமணியிலே படித்தபோது, அதை எழுதியவர் மீனம் பாளைப் போன்ற ஸ்த்ரீயைக் கண்டு அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் எ ன் று நினைத்தேனே. இப்போது அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா ? நான் இளமைக்குரிய அறிவின்மையால் அத்தனே பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழை யென்று கருதினேன் போலும் ! 'அடா மூடா! உனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரம்மசரிய விரதத்திலே ஆயுளேக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வருகின்ருய். மீன மற்ருெருவனே மணஞ்செய்துகொண்டால் உனக்கு எளிது தானே? நீயோ வேருெரு பெண் மீது இவ்வாழ்க்கையில் மையல் கொள்ளப் போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத் திற்கு இடையூருக இருந்தாள். இவளும் வேருெருவனே மணஞ் செய்துகொண்டு அவன் மனைவியாய் விடுவாளாயின், உனது விரதம் கிர்விக்கினமாக கிறைவேறும். ஈசனன்ருே உனக்கு இங்ங்னம் நன்மையைக் கொண்டு விடுகிருன் ? இதில் நீ ஏன் வருத்தமடைய வேண்டும் ? என்று சில சமயங்களில் எனதுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும். மீண்டும், வேருெரு விதமான சிங்தை தோன்றும் : “ அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேருெருவனே மணஞ் செய்துகொள்ளவே மாட்டாள். எனது பிராணைேடு ஒன்றுபட்டவளாதலால், எனது கெஞ்சத் திலே ஜொலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி, அந்த தர்மத்திற்கு இடையூறு உண்டாகும் என்று அஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாமலிருக்கிருள். ஆமடி, மீன ! உன்னே கான் அறியேன? எதுவரினும் c என்னே மறப்பாயா? அந்தக் கண்கள் " உன்னே மறக்கவே மாட்டேன் ' என்று எத்தனை முறை