பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதி தமிழ் அவசியமாயிருந்தது. இப்பொழுது நான் போகிறேன். இன்று மாலை நான்கு மணிக்கு, பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீளும்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்.' என்று சொல்லிப் போய்விட்டார். மாலைப் பொழுதாயிற்று. நான் ஸங்யாசி வேஷத்தை மாற்றி. எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருக்தேன், பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர் ஸ்திரீ ரூபங்கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட் டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது. வந்தே மாதரம்