பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய கோணங்கி 41 கூட்டிக் கொண்டு போய், வெள்ளைக்காரர் தேசங்களிலே, பல இடங்களில் கூடாரமடித்து வேடிக்கை காண்பிப்பது அந்தக் கம்பெனியாரின் தொழில். விதிவசத்தினால் நான் அந்த ஜான்ஸன் துரை கம்பெனியிலே சேர்ந்தேன். இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களிலே ஸஞ்சாரம் செய்திருக்கிறேன். அமெரிக்காவுக்குப் போயிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு சண்டை தொடங்கினபோது, மேற்படி ' கம்பெனி' கலந்து போய்விட்டது. எங்களுக்கெல்லாம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். உயிருள்ளவரை போஜ னத்துக்குப் போதும்படியான பணம் சேர்த்து வைத்திருக் கிறேன். ஆனாலும் பூர்வீகத் தொழிலக் கைவிடுவது ஞாயமில்லே என்று கிக்னத்து இங்கு வந்த பின்னும் பல ஊர்களில் சுற்றி, இதே தொழில் செய்து வருகிறேன். ஐரோப்பா முதலிய தேசங்களில் சுற்றின காலத்தில் மற்றக் கூத்தாடிகளைப் போல வீண் பொழுது போக்காமல், அவ்விடத் துப் பாஷைகளைக் கொஞ்சம் படித்து வந்தேன். எனக்கு இங்கிலீஷ் கன்ருகத் தெரியும். வேறு சில பாஷைகளும் தெரியும். அநேக புஸ்தகங்கள் வாசித்திருக்கிறேன். இங்கு வந்து பார்க் கையிலே அவ்விடத்து ஜனங்களைக் காட்டிலும் இங்குள்ளவர்கள் பல விஷயங்களிலே குறைவுபட்டிருக்கிருர்கள். கம்முடைய பரம்பரைத் தொழிலை வைத்துக் கொண்டே ஊருராசப்போய் இங்குள்ள ஜனங்களுக்குக் கூடியவரை கியாயங் கள் சொல்லிக் கொண்டு வரலாமென்று புறப்பட்டிருக்கிறேன். இது தான் என்னுடைய விருத்தாந்தம்” என்ருன். ஒரு ஐரிகை வேஷ்டி எடுத்துக் கொடுக்கப் போனேன்; போன தீபாவளிக்கு வாங்கினது; கல்ல வேஷடி. ' சாமி வேண்டியதில்லே ' என்று சொல்லி விட்டு அவன் மறுபடி உடுக்கை யடித்துக் கொண்டு போய் விட்டான். போகும் போதே சொல்லுகிருன் : ' குடு குடு, குடு குடு, குடு குடு, குடு குடு சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது. எட்டு லட்சுமியும் ஏறி வளருது,