பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை Vĩi பிழை கிறைந்ததாக உள்ளது. ஆதலால் அதையும் உரைகடை வளர்ச்சிக்கு அளவு கோலாகக் கொள்ள இயலாது. பெஷி என்ற இத்தாலிய நாட்டுப் பாதிரியார் தமிழ் நாட்டிற்குப் பதினெட்டாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வந்து தமிழை நன்கு கற்று வீரமாமுனிவர் என்ற பெயரும் பூண்டு தமிழில் காவியம் இயற்றியதோடு, அவிவேக பூரணகுரு கதை, வேதியர் ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களையும் எழுதினர். இவருக்கு முன்பே பதினேழாம் நூற்ருண்டின் மத்தியில் இந்தியாவிற்கு வந்து வாழ்ந்து மறைந்த தத்துவ போதக சுவாமி என்ற கிறிஸ்துவர் வடமொழி பெரிதும் கலந்த ஒரு சில உரைநடை நூல்கள் எழுதியுள்ளார். வீரமாமுனிவர் எழுதிய அவிவேக பூரண குரு கதை என்பது நகைச் சுவையோடு கூடியது. இவர் எழுதிய உரைநடை நூல்கள் எளிய கடையில் இருந்தமையால் பலரும் விரும்பிப் படித்தனர். இவருக்குப் பின் வந்த உரைநடை யாசிரியரான சிவஞான முனிவர் சிவஞான போதத்தை விளக்கி திராவிட மகாபாடியம் என்ற பொருட் செறிவு கொண்ட நூலே இயற்றினர். தாண்டவராய முதலியார் 19-ஆம் நூற்ருண்டின் தொடக்கத் தில் தமிழ் உரைநடையில் ஒரு புதிய வழியைத் தோற்றுவித்தார். இவர் எழுதிய பஞ்சதந்திரக் கதை அன்றைய தமிழ் உரைநடைக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக அமைந்தது. அது தெளிவானது ; தடையற்றது. கதா மஞ்சரி என்ற உரைநடை நூலையும் இவர் தொகுத்துள்ளார். இவருக்குப் பின் எழுதிய உரைநடையாசிரியர்களில் ஒரு தனி இடத்தைப் பெற்றிருப்பவர் யாழ்ப்பாணத்துப் பெரியாரான ஆறுமுக நாவலர் ஆவார் (பிறப்பு கி. பி. 1833). பெரிய புராண வசனம், திருவிளையாடல் புராண வசனம், கந்தபுராண வசனம் முதலான பல நல்ல உரைநடை நூல்களே இவர் தமிழில் எழுதி யுள்ளார். மாணவர்களுக்கான பாட நூல்களும் எழுதினர். மிகத் தெளிவான உரைநடைக்கு இவரே முதலில் வழிகாட்டியவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகளும் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்யம் முதலான உரைநடை நூல்களை எழுதியிருக்கிரு.ர். இவர்களுக்குப் பின் வந்தவர் வினே