பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வேப்பமரம் இளவேனிற் காலத்தில் ஒரு நாள் காலை வேளையில் நான் மலய கிரிச் சார்பிலே தனியாக உலாவிக் கொண்டிருந்தேன். நெடுங் துாரம் சுற்றிய பிறகு என் உடம்பில் சற்றே இளேப்புண்டா யிற்று. அந்த இளேப்புத் தீரும் பொருட்டாக அங்கொரு தோப்புக்குள்ளே போய் ஒரு வேப்ப மரத்தடியில் படுத்துக் கொண்டேன். இன்பமான காற்று வீசிற்று. சிறிது நேரத்துக் குள் கண்ணயர்ந்து கித்திரையில் ஆழ்ந்துவிட்டேன். அப்போது நான் கண்ட அபூர்வமான கனவை இங்கெழுதுகிறேன், நான் துரங்கிக் கொண்டிருக்கையில், ' ஏ மனிதா, ஏ. மனிதா, எழுந்திரு; எழுந்திரு ' என்று அமானிஷிகமாக ஒலியொன்று கேட்டது. இந்த ஒலியைக் கேட்டவுடன் கண்ணே விழித்தேன். உண்மையாகவே விழிக்கவில்லை. கனவில் விழித்தேன். அதா வது விழித்துக் கொண்டதாகக் கனவு கண்டேன். விழித்து, ' யார் கூப்பிட்டது ?' என்று கேட்டேன். " நான்தான் வேப்பமரம் ; நான்தான் கூப்பிட்டேன், எழுந்திரு' என்று மறுமொழி உண்டாயிற்று. உடனே நான் யோசிக்கலானேன் : “ ஒஹோ, ஓஹோ ! இது பேயோ, பிசாசோ, யக்ஷர், கிங்கரர், கந்தர்வர் முதலிய தேவ ஜாதியோ, வன தேவதைகளோ, யாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் வேப்ப மரம் எங்கேனும் பேசுவ துண்டோ அட, போடா, பேயாவது ? அதெல்லாம் சுத்தக் கட்டுக் கதையனருே; நான் உண்மையாகவே கண்ணே விழித்து ஜாக்ர கிலேயடையவில்லே. இன்னும் கனவு நிலையிலேதானிருக் கின்ருேம். இந்த ஒலி கனவில் கேட்கும் கற்பனேயொலி'இங்ங்னம் நான் யோசனை செய்து கொண்டிருக்கையில், ஏ மனிதா, ஏ. மனிதா, எழுந்திரு ' என்று மறுபடி சத்தமுண்டா யிற்று, " நீ யார்?' என்று பின்னும் கேட்டேன்.