பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாரதி தமிழ் " நான் வேப்ப மரம். என் அடியிலேதான் நீ படுத்திருக்கிருய். உனக்குச் சில நேர்த்தியான விஷயங்கள் கற்றுக் கொடுக்கும் பொருட்டாக எழுப்புகிறேன்" என்று மறுமொழி வந்தது. அப்போது நான் : “ சரி, கமக்குத் தெரியாத விஷயங்கள் உலகத்தில் எத்தனையோ உண்டென்று ஷேக்ஸ்பியரே சொல்லி யிருக்கிருர். அந்தப்படி மரங்களுக்குப் பேசும் சக்தி இருக்கலாம். அவ்விஷயம் நமக்கு இதுவரை தெரியாமலிருக்கலாம். ஆதலால், இந்த மரத்துடன் சம்பாஷணை செய்து விஷயத்தை உணர்ந்து கொள்வோம்' என்றெண்ணிக் கண்ணைத் திறந்து கொண் டெழுந்து கின்றேன். (உண்மையாகவே எழுந்து கிற்கவில்லை. எழுந்து கின்றதாகக் கனவு கண்டேன்.) எழுந்து கின்று கொண்டு : “ வேப்ப மரமே, உனக்கு மனித பாஷை எப்படித் தெரிந்தது? மனிதரைப் போல கெஞ்சு, வாய், தொண்டை, அண்ணம், காக்கு, பல், உதடு என்ற கருவிகளில்லாதபோது மனித பாஷை பேசுவது ஸாத்யப்படாதே? எங்களிலே பல் மாத்திரம் விழுந்தவர்களுக்கும் உச்சரிப்பு நேரே வராமல் போகிறதே. அடிநாக்கில்லாதவர்கள் ஊமையாய்ப் போகிருர்களே. அப்படியிருக்க நீ மனித சரீரமேயில்லாமல் மனிதபாஷை எங்ங்னம் பேசுகிருய்?' என்று கேட்டேன். அப்போது வேப்ப மரம் சொல்லுகிறது:"கேளாய், மானுடா, மனிதனுக்கு ஒரே வாய்தானுண்டு. எனக்கு உடம்பெல்லாம் வாய். மனித பாஷை பேசுவதற்கு வாய் முதலிய புறக் கருவிகள் மனிதரைப் போலவேயிருத்தல் அவசிய மென்று t கினைக்கிருய். ஸாதாரண ஸ்திதியில் அவை அவசியங் தான். ஆனால், கான் மரமில்லை. நான் அகஸ்திய முனிவரின் சிஷ்யன். தமிழ் பாஷையில் எனக்குள்ள ஞானம் இக்காலத்தில் அகஸ்தி யரைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது........ ” வேப்ப மரம் பின்னும் சொல்லுகிறது :' கடந்த கதையை அடியிலிருந்து சொல்லுகிறேன். மானுடா கவனத்துடன் கேள். எனக்கு இப்போது முப்பது வயதுதான கிறது. நான் இள மரம். பதினேக்து வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் வஸந்த காலத்தின்போது இராவேளையில் ஆச்சர்யமான கிலா வீசிக்கொண்டிருந்தது. நான் விழித்துக்கொண்டிருந்தேன்.