பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ļX கடையைக் கையாண்டனர். ஆனல் தமிழ்த் தாத்தா என்று வழங் கப்பெறும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர், மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம், என் சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், முதலிய பல உரைநடை நூல்களே மிக எளிய இனிய நடையில் இயற்றினர். இந்த எளிய கடையைப் பின்பற்றிப் பல சிறந்த தமிழறிஞர்கள் எழுதலானர்கள். கா. சுப்பிரமணிய பிள்ளை தமிழ் இலக்கிய வரலாறு எழுதினர். டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளே உரைநடை யின் அழகை எடுத்துக் காட்டவல்ல ஒரு நடையைக் கையாண்டார். பன்மொழிப் புலவர்களான தெ. பொ. மீட்ைசிசுந்தரருைம், கா. அப்பாதுரையாரும், செறிவுள்ள உரைநடை நூல்கள் இயற்றி இருக்கிருர்கள். பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தமிழ் உரை நடை வளர்ச்சிக்குச் செய்த தொண்டு மிகப் பெரிது. இவர் ஆனந்தவிகடன், கல்கி முதலிய இதழ்களுக்கு ஆசிரியராக இருந்த போது பல நகைச்சுவைக் கட்டுரைகளும், சிறந்த சிறுகதைகளும், வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற நவீனங் களையும் எழுதியிருக்கிருர். பொருளாதாரம், அரசியல் முதலான துறைகளைத் தெளிவாக விளக்கிப் பொது மக்களுக்கு புரியும்படி செய்வதில் கல்கி இணையற்றவர். ராஜாஜி அவர்கள் பல உரைகடை நூல்களையும் சிறுகதை களையும் விஞ்ஞான நூல்களையும் தமக்கே உரித்தான எளிய உரைநடையில் எழுதியிருக்கிருர். தமிழ் நாவல் உலகத்தில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கி யவர் டாக்டர் மு. வரதராசனர் ஆவார். இவர் செம்மையான எளிய நடையைக் கையாண்டு, பல நாவல்கள் எழுதியிருக்கிருர். தமது எண்ணங்கள் படிப்போருக்கு தெளிவாகப் புரியும்படி செய்வதில் இவர் மிக வல்லவர். இவருடைய பரந்த தமிழறிவு இதற்குத் துணையாக கின்றது. உரைநடையில் இவர் எழுதிய நூல்கள் மிகப் பலவாகும். இவரைப் பின்பற்றி கு. ராஜவேலு அவர்களும் பல நவீன காவல்களை எழுதியிருக்கிருர். திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் பல சிறு கதைகளும், கட்டுரைகளும் வேறு பல நூல்களையும், எளிய இனிய நடையில் இயற்றியுள்ளார். நா. பார்த்தசாரதி, மீ. ப. சோமசுந்தரம் முதலிய த மி ழ் அறிஞர்களும், நவீனங்களும் சிறுகதைகளும்