பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாரதி தமிழ் மனிதனைத் தேடிப் பார்த்ததாகவும், அகப்படவில்லை என்றும், மற்ருெரு நாள் கூட்டி வருவதாகவும் இன்று தான்மாத்திரம் தனியே கத்தி வீசிக் காண்பிப்பதாகவும் சொன்னன். சரியென்று சொல்லி நான் அவனுக்கு முதலாவது காபியும், இட்டலியும் கொண்டு வந்து வைத்து சாப்பிடச் சொன்னேன். பாதி சாப்பிட் டுக் கொண்டிருந்தான். அப்போது குள்ளச் சாமியார் என்ற யோகீசுரர் அங்கே வந்தார். அவரைக் கண்டவுடன் கெட்டை மாடன் எழுந்து ஸலாம் பண்ணி.- ஜராம், ராம மஹா ராஜ் : என்ருன். அவரும் இவனேக் கண்டவுடன் ராம், ராம்’ என்ருர். பிறகு நெடுநேரம் இருவரும் மலையாள பாஷையில் பேசிக் கொண் டார்கள். எனக்கு மலையாளம் அர்த்தமாகாதபடியால் நான் அவர் களுடைய ஸம்பாஷணையை கவனிக்கவில்லை. குள்ளச் சாமியாரை நான் குருவென்று நம்பியிருக்கிறபடியால் அவருக்குக் கடையி லிருந்து வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வந்து பாலும் பழமும் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். கீழ்த் தளத்தில் சாப்பிட்டார்கள். பிறகு நான் வெற்றிலைத் தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மேல் மாடியில் பூஜா மண்டபத்துக் குப் போகலாம் என்று கூறி அழைத்து வந்தேன். இருவரும் மேல் மாடிக்கு வந்தார்கள். நான் ஊஞ்சலின்மீது அவர்கள் இரு வரையும் வீற்றிருக்கும்படி செய்து தாம்பூலம் கொடுத்தேன். இருவரும் தாம்பூலம் போட்டுக் கொண்டார்கள். பிறகு ஒரு கடினத்துக்குள்ளே கெட்டை மாடன் வெளிமுற்றத்திலிருந்து ஒரு காற்காலி எடுத்துக் கொண்டு வந்தான். அதன் மேலே ஏறிக் கொண்டு ஊஞ்சல் சங்கிலிகளைக் கழற்றினன். அடுத்த கூடிணத் துக்குள் ஊஞ்சலையும் சங்கிலிகளையும் கொண்டு சுவரோரத்தில் போட்டு விட்டான். பிறகு நெட்டை மாடன் என்னே நோக்கி, ' எனக்கு ஸ்மானமாகக் கத்தி வீசத் தெரிந்தவர் இந்த ஊரில் ஒருவர்தானுண்டு என்று சொன்னேனே, அவர் யாரெனில் இந்தச் சாமியார் தான் ' என்று குள்ளச் சாமியாரைக் காட்டினன். கான் ஆச்சரியத்தால் ஸ்தம்பிதனுய் விட்டேன். ஒரு கூடிணத்துக்குள் அந்த இருவரும் தலைக்கொரு கத்தியாக எடுத்துக் கொண்டு வீசத் தொடங்கி விட்டார்கள். நெடுநேரம் அவர்களுக்குள்ளே கத்திச் சண்டை கடந்தது. அதைப் பார்த்து