பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாரதி தமிழ் வீராசாமி நாயக்கர் மேற்படி பட்டாசாரியாருடைய தலையில் ஒரு குட்டுக் குட்டி ஒரு தரத்துக்குப் பொடி போட்டுக் கொண்டார். வாத்தியார் மறுபடியும் கோஷிக்கலானர்: " ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படி, கலியாணம் செய்ய வேண்டும் , புருஷன் கொடுமையை சகிக்க முடியாமலிருந் தால், ஸ்திரீ சட்டப்படி அவனே தியாஜ்யம் செய்துவிடச் சட்டமும் இடம் கொடுக்க வேண்டும்; ஊர்க்காரரும் தூஷண செய்யக் கூடாது. பெண் உழைத்துச் சாப்பிட முடியாது. அந்த விஷ யத்தில் ஐரோப்பிய ஸ்திரீ ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப் பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது. பெண்ணே ஸம்பாத்யம் பண்ணிப் பிழைக்க விடக்கூடாது. அவளுக்கு பிது ரார்ஜிதத்தில் பாகமிருக்க வேண்டும். கலியாணம் செய்துகொண் டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்க வேண்டும். (பெண்டாட்டி கையில் காசு கொடுக்கக் கூடாதென்று சொல்லுகிற மனுஷ்யர்களும் இருக்கத்தான் செய்கிரு.ர்கள்.) பெண் அவளிஷ்டப்படி சஞ்சரிக்கலாம். தன் இடங்களில் ஸ்த்ரீ களைக் கண்டால் மரியாதை செய்து வணங்க வேண்டும். அப்படி எந்தப் புருஷன் மரியாதை செய்யவில்லை யென்று தோன்று கிறதோ, அவனே கிருகஸ்தர்கள் நெருங்கக்கூடாது. அவன் கூட ஒருவனும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் இருந்துவிட வேண்டும். அப்படி வீதி வழியோ, கடைத் தெருவோ, ரயில் வழியோ, காசிப் பட்டணமோ ஸ்திரிகள் தனியே போனலும், புருடர் கண்டு வணங்கும்படி ஏற்பாடு செய்வது நாளது தேதியில் இந்த தேசத்தில் வெகு கஷ்டம். என்ன செய்யலாம் ? ஹிந்துக் களிலே நூற்றுக்குத் தொண்ணுாறுபேர் மூட ஜனங்கள். அது எப்படி நாசமாய் போனலும், படித்துக் கெளரவமாக குடித்தனம் பண்ணும் ஜனக் கூட்டத்துக்குள்ளே, ஸ்திரீகள் சுயேச்சையாகப் பேசலாம், சுயேச்சையாக ஸஞ்சரிக்கலாம், என்று வைக்க வேண் டும். அது ஸாத்யமாகும்படி புருஷரைத் தண்டிக்க வேண்டும். கையாலாகாத பேரை தண்டிப்பதிலே என்ன பிரயோஜனம், ஸ்வாமி ? எத்தனை நாள் இந்த தேசத்தில் பழங் குப்பையில் முழுகிக் கிடக்கப் போகிருர்கள் : நத்தைப் புழுவைப் போல ஆணும் பெண்ணும் கூடப் பிறக்கிருேம். உடன் பிறந்தான்